/tamil-ie/media/media_files/uploads/2022/01/Ni2up.jpg)
Bigg Boss 5 Tamil Finalist niroop New Get Up Reason
Bigg Boss 5 Tamil Finalist niroop New Get Up Reason : கடந்த அக்டோபர் மாதம் விஜய் டிவியில் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ளது. முந்தைய சீசன்களில் வெற்றியாளரை ஓரளவிற்கு கணிக்க முடியும். ஆனால், இந்த சீஸனின் வெற்றியாளர் யாராக இருக்கும் என்கிற விவாதங்கள் இன்று வரை சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அந்த வரிசையில் நீண்ட கூந்தல் வைத்திருந்த இரண்டாவது ஃபைனலிஸ்ட்டான நிரூப், வேறு தோற்றத்தில் தற்போது மாறியிருக்கிறார். அதற்கான காரணம் பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய உண்மையான முகத்தை மறைத்து இவ்வளவு நாள் வாழ்ந்தது யார் என்று தேர்வு செய்து பன்னீரும், பூ இதழ்களும் தூவ வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதலில் பாவனியைத் தேர்வு செய்தவர்கள், பிறகு நிரூப் பை தேர்வு செய்து ஃபினாலேவுக்கு அனுப்பினர். இதனால், எவ்வளவு அசிங்கப்பட்டு நிருப் பைனலிஸ்ட் ஆக வேண்டுமா என பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தார்கள்.
இதையடுத்து, நேற்றைய எபிசோடில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு வித்தியாசமாக மாறியிருந்தார் நிரூப். இதற்கு முன்பே தன் தலைமுடியை வெட்டாமல் இருப்பதற்கான காரணத்தைப் பலமுறை நிரூப் சொல்லியிருக்கிறார். இதனால் அபிநயிக்கும் நிரூப்பிற்கும் ஒருமுறை சண்டைகூட வந்திருக்கிறது. ஆனால், அப்போதும் இந்த முடி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வளர்த்து வருவதாகக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், நேற்றைய எபிசோடில் மக்கள் நிரூப்பின் வேறு தோற்றதைப் பார்க்கவேண்டும் என்பதற்காக நீண்ட தலைமுடியை வெட்டிக்கொள்ள முடியுமா என்று பிக் பாஸ் கேள்வி கேட்க, வெட்டும் முடியை தன்னிடம் கொடுக்க முடியுமென்றால் வெட்டிக்கொள்வதாக நிரூப் சொல்ல, இறுதியில் ஹேர்கட் செய்து வித்தியாசத் தோற்றத்தில் இருந்தார் நிரூப்.
நிரூப்பின் இந்த தோற்றத்தைக் கண்டதும் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களும் வாயடைத்து நின்றனர். அழகன் அழகன் என்று கூறியபடி பிரியங்கா கட்டியணைத்துக்கொண்டார். இத்தனை நாள் நீண்ட தலைமுடியுடன் நிரூப்பை பார்த்த நமக்கு, இந்த கெட்-அப் உண்மையில் அழகாகத்தான் உள்ளது!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.