scorecardresearch

ஃபைனலிஸ்ட் 5 பேரும் கம்பெனி ஆர்டிஸ்ட்: இது நியாயமா விஜய் டி.வி?

Bigg Boss 5 Tamil Finalists Vijay Tv Products Tamil News மக்கள் வாக்கெடுப்பு அனைத்தும் வெறும் கண் துடைப்பு என்று குற்றம் சாட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Bigg Boss 5 Tamil Finalists Vijay Tv Products Tamil News
Bigg Boss 5 Tamil Finalists Vijay Tv Products Tamil News

Bigg Boss 5 Tamil Finalists Vijay Tv Products Tamil News : எப்போதும்  இல்லாமல், இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசனில்தான் ஏராளமான புது முகங்கள்  இருந்தனர். பரீட்சையமே இல்லாத பலர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். திருநங்கை, டிக் டாக் பிரபலம், யூடியூபர், நாட்டுப்புற கலைஞர் என பல்வேறு விதமான துறைகளிலிருந்து பார்த்துப் பார்த்து போட்டியாளர்களைத் தேர்வு செய்திருந்தனர். ஆனால், இருந்தும் என்ன பயன்? இறுதிச் சுற்றில் தேர்வாகி இருப்பவர்கள் அனைவரும் விஜய் டிவி முகங்களே!

எல்லோருடைய நம்பிக்கையாக இருந்த சாமானிய பெண்ணான தாமரையின் எவிக்ஷன் பொதுமக்களுக்கு மட்டுமல்ல வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. மக்களில் ஒருவராக இருப்பவர் இம்முறை நிச்சயம் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நிறைவேறாமல் போகவே, இப்போது வீட்டிற்குள் இருக்கும் 5 பெரும் விஜய் டிவி முகங்கள் என்றும் மக்கள் வாக்கெடுப்பு அனைத்தும் வெறும் கண் துடைப்பு என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

நிகழ்ச்சியின் இறுதிக் கட்டம் வர வர, வீட்டிற்குள் நடைபெறும் அனைத்து போட்டிகளும் விஜய் டிவி முகங்களுக்கு சாதகமானதாகவே அமைந்தன. டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சஞ்சீவ் வெற்றிபெற்ற பிறகு, அமீருக்காக அந்த டாஸ்க்கை மீண்டும் செய்ய வைத்ததாக வதந்திகள் வந்தன. ஆம், விஜய் டிவியின் கிங்ஸ் ஆஃப் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் கொரியோகிராஃபராக பிரபலமானவர் அமீர். இவர் வேறு சில விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளுக்கும் நடன வடிவமைப்பாளராக இருந்திருக்கிறார்.

மூன்றாம் சீசனில் பங்குபெற்ற யாஷிகாவின் சிபாரிசில் இந்த சீசனுக்கு என்ட்ரி கொடுத்தவர் நிரூப். இவர் திறமையான போட்டியாளர் என்றாலும், விஜய் டிவியின் ஆதரவில்லாமல் அவர் இரண்டாம் ஃபைனலிஸ்ட்டாக வாய்ப்பில்லை. கடந்த சீசனில் யாசிகவின் சிபாரிசில் இல்லே வந்த பாலாஜி, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதேபோல இந்த சீசனில் நிரூப் இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக முன்னேறியுள்ளார். இந்த இரண்டாம் ஃபைனலிஸ்ட் வாய்ப்பு முதலில் பாவனிக்கு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான  கனா காணும் காலங்கள் சீரியலில் முதல் முதலில் நடிக்க ஆரம்பித்த ராஜு ஜெயமோகன் பிறகு கல்லூரி சாலை, ஆண்டாள் அழகர் உள்ளிட்ட ஏகப்பட்ட விஜய் டிவி சீரியல்களில் நடித்தார். இவர் தற்போது மூன்றாவது ஃபைனலிஸ்ட்டாக மக்களா தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளராக உள்ளே இருக்கிறார். ஆரம்பத்திலிருந்து தன்னுடைய டைமிங் காமெடியால அனைவரின் மனதை ஈர்த்தவர், இந்த சீஸனின் வெற்றியாளராகவும் அதிக வாய்ப்பு உள்ளது.

4-வது ஃபைனலிஸ்ட் பற்றி விளக்கம் தேவையே இல்லை. ஆம், ஏற்கெனவே விஜய் டிவியின் ஃபேவரைட் தொகுப்பாளினியாக வளம் வந்துகொண்டிருக்கும் பிரியங்காதான் நான்காவது ஃபைனலிஸ்ட். ராஜுவுக்கு அடுத்தபடியாக அதிகமான மக்கள் ஆதரவு பெற்றிருக்கும் போட்டிரியாளார் பிரியங்காதான்.

இறுதியாக, கடைசி ஃபைனலிஸ்ட்டான பாவனியும் விஜய் டிவியில் வெளிவந்த ரெட்டை வால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர்தான். இப்படி இம்முறை 5 ஃபைனலிஸ்ட்களும் விஜய் டிவி முகங்களாக இருக்க, இதில் எந்த ஸ்க்ரிப்டும் இல்லை என்று விஜய் டிவி கூறுவதைக் கண்டு மக்கள் கடுப்பாகிவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 5 tamil finalists vijay tv products tamil news