bigg boss 5 tamil finalist tamil news: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஃபினாலே இந்த வாரத்தில் அரங்கேற உள்ளது. இதில் இடம்பிடிக்க போகும் டாப் 5 போட்டியாளர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான அமீர் ‘டிக்கெட் டு ஃபினாலே’ -வை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டார். அவரைத் தொடர்ந்து நிரூப்பும் ஃபைனலில் நுழைந்து விட்டார். நேற்று ராஜு சேவ் செய்யப்பட்டு, இறுதிப் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மீதமுள்ள போட்டியாளர்களில் சிபி பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்ட நிலையில் பிரியங்கா, பாவனி, தாமரை ஆகிய மூவரில் எந்த இருவர் இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது?, இந்த வாரத்தில் வெளியேறப்போவது யார்? என்பது போன்ற கேள்விகளுடன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று 98 ம் நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் இறுதிப்போட்டிக்குள் நுழையப்போகும் அந்த ஃபைனலிஸ்ட் பிரியங்கா தான் என்பதை கமல் உடைத்துவிட்டார்.

அந்த ப்ரோமோவில் கமல், ‘இவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அடுத்த ஃபைனலிஸ்ட்…. பிரியங்கா’ என்கிறார். தொடர்ந்து அவர், டென்ஷனாக காத்திருக்கும் பாவனி, தாமரையிடம், நீங்கள் இருவருமே ஃபைனலிஸ்ட் ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். ஆனால் அவர்களின் தீர்ப்பு எப்படி இருக்கும் என சொல்ல முடியாது என்று கூறி கையில் இருக்கும் கார்டை கமல் பார்ப்பதுடன் ப்ரோமோ நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“