பிக் பாஸ் சீசன் 5-ல் இந்த டிக் டாக் பிரபலமா? க்ளு கொடுத்த விஜய் டிவி

tiktok fame gp muthu latest tamil news: கோலாகலமாக துவங்கவுள்ள பிக்பாஸ் சீசன் -5ல் டிக் டாக் பிரபலம் ‘ஜிபி முத்து’ களமிறங்கினால் சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமிருக்காது என இணைய வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

bigg boss 5 Tamil News: tiktok fame gp muthu may enter bb 5 house says vijay tv insta post

biggboss season 5 tamil latest update in tamil: இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2ம் அலையால் பிக்பாஸ் சீசன் – 5 கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தாமதமாக துவங்கப்பட உள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகலாம் என சின்னத்திரை வட்டாரங்கள் கூறி வரும் நிலையில் சீசன் – 5யும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது என்றும், இந்த ஷோ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சில போட்டியாளர்களின் தேர்வு உறுதியாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

BIGGBOSS 5 latest Tamil News: biggboss season 5 tamil latest update in tamil

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற செய்தியும், லிஸ்டும் வெளிவந்த வண்ணம் உள்ளன. தவிர, ‘இது தான் உத்தேச போட்டியாளர்கள் பட்டியல்’ என்று கூறி ஒரு பட்டியலும் இணையத்தில் உலா வருகிறது.

இந்த நிலையில், விஜய் டிவி அதன் இன்ஸ்டா பக்கத்தில் “வணக்கம் நண்பர்களே” என பதிவிட்டுள்ளது. இதை பார்த்த நமது நெட்டிசன்கள், ஒரு வேளை டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து என்ட்ரி கொடுக்க உள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும், மறைமுகமாக விஜய் டிவி பதிவிட்டுள்ள அந்த பதிவின் கமெண்டில், ஜிபி முத்து நிச்சயம் பிக் பாஸ் 5 வீட்டுக்கு போட்டியாளராக வரப்போகிறார் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர்.

கோலாகலமாக துவங்கவுள்ள இந்தாண்டு பிக் பாஸில் (சீசன் -5) புது லோகோ, புது வீடு, புது போட்டியாளர்கள், புதுப்புது பிரச்சனைகள் என கலைகட்ட உள்ள நிலையில் ‘செத்தப்பயலே நாரப்பயலே’ என்ற பேமஸ் வசனத்துடன் டிக்டாக் ஜிபி முத்து களமிறங்கினால் சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமிருக்காது என நெட்டிசன்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil news tiktok fame gp muthu may enter bb 5 house says vijay tv insta post

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com