'நீ அசிங்கமா விளையாடியதால் நானும் அப்படியே விளையாடினேன்' - வருண், நிரூப் மோதல்!
Bigg Boss 5 Tamil Nirrop Varun fight Promo இப்படியே மாறிமாறி குரல் உயர்த்திப் பேச, வழக்கம்போல இந்த ப்ரோமோ மக்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Bigg Boss 5 Tamil Nirrop Varun fight Promo இப்படியே மாறிமாறி குரல் உயர்த்திப் பேச, வழக்கம்போல இந்த ப்ரோமோ மக்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Bigg Boss 5 Tamil Niroop Varun fight Promo : அவ்வளவாக பரீட்சையம் இல்லாத முகங்கள்தான் இந்த சீஸனின் பிக் பாஸ் தேர்வு. இதனால் இம்முறை நிகழ்ச்சி விறுவிறுப்பாக நகருமா அல்லது தொய்வடையுமா என்கிற கேள்வி ஆரம்ப நாட்களிலிருந்தாலும், திருநங்கை நமிதாவின் திடீர் வெளியேற்றம், யூடியூபர் அபிஷேக்கின் வகைவகையான அட்ராசிட்டி என பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருந்தன. அபிஷேக்கின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் சற்று சுவாரசியம் குறைந்ததுபோல் தோன்றினாலும், தற்போது ஆட்டம் சூடுபிடித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்த வரிசையில் இன்றைய ப்ரோமோக்கள், தரம்.
Advertisment
நீயும் பொம்மை, நானும் பொம்மை, தெரியும் உண்மை என்பதுதான் இந்த வாரத்தின் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க். ஏற்கெனவே வெளியான முதலாம் ப்ரோமோவில், பிரியங்கா இந்த டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பதிவாகியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் ப்ரோமோவில், நிரூப் மற்றும் வருணிற்கு இடையே வார்த்தைச் சண்டை அரங்கேறியுள்ளது.
இரண்டாம் ப்ரோமோவில், வருண் தன்னை இந்த கேமில் விளையாடவிடாமல் தடுப்பதாகக் கூறிக்கொண்டிருந்தார் நிரூப். அதற்கு பதில் கூறும் விதமாக நிரூப்பை விளையாட விடமுடியாது என்று வருண் கூறினார். இந்த வாக்குவாதம் நீண்டது. தன்னிடம் இருந்த பொம்மையை நிரூப் பிடுங்கி விளையாடுவது அசிங்கமாக இல்லையா என்று வருண் கேள்வி எழுப்ப, நிரூப் கொதித்தெழுந்துவிட்டார்.
Advertisment
Advertisements
'உன்னுடைய கேமை மாட்டும் நீ விளையாடு' என்று வருண் கூறியதும் சட்டென கோபமடைந்த நிரூப், 'நீ என் விளையாட்டைப் பற்றிச் சொல்லாதே. என்னுடைய கேமைதான் நான் விளையாடிக்கொண்டிருக்கிறேன்' என்று பதிலளித்தார். இப்படியே மாறிமாறி குரல் உயர்த்திப் பேச, வழக்கம்போல இந்த ப்ரோமோ மக்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைக்காவது மக்களை ஏமாற்றாமல், நல்ல கன்டென்ட் ஒளிபரப்பினால் நல்லா இருக்கும்.
என்ன இருந்தாலும், இந்த சண்டை இன்றோடு முடிந்துவிடுமா? அல்லது கடந்த சீஸனின் ஆரி - பாலா போல இறுதி வரை நீண்டிருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil