Bigg Boss 5 Tamil Priyanka Akshara Cold war Tamil News
Bigg Boss 5 Tamil Priyanka Akshara Cold war Tamil News : பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே விமர்சனங்கள் இல்லாமல் இருக்காது. அந்த வரிசையில் தற்போது அனைவரின் பார்வையும் பிரியங்கா மீது பாய்ந்துள்ளது. ஆம், பிரியங்கா ஏன் அக்ஷரா மீது கடுப்பில் இருக்கிறார் என்பதுதான் இன்றைய பிரேக்கிங் கன்டென்ட்.
Advertisment
நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்தே அக்ஷரா மீது ஏதோ ஒருவித கடுப்பிலிருந்த பிரியங்கா, இன்றைய ப்ரோமோவில் வெளியான ஒரு பகுதியிலும் அதனை வெளிப்படுத்தியுள்ளார். வீட்டில் யாருடைய இருப்பு தெரியப்படவில்லை என்கிற கேள்வியை அனைவரிடத்திலும் முன்வைத்தபோது, இசைவாணி, மதுமிதா, தாமரை என பல்வேறு விதமான பதில்கள் வந்துகொண்டிருந்த நிலையில், பிரியங்கா அக்ஷராவை குறிப்பிட்டார்.
அவ்வளவுதான். கன்டென்ட் கிடைத்துவிட்டது என்கிற சந்தோஷத்தில் அனைத்து கிரியேட்டர்களும் உள்ளனர். அப்படி என்னதான் ஆரம்பத்திலிருந்து அக்ஷரா மீது பிரியங்காவிற்குக் கோபம் என்பதுதான் தலைப்பு. அக்ஷரா தன் வாழ்க்கையில் மற்றவர்களைப்போல் எந்தவிதமான துயரங்களையும் பெரிதாக அனுபவிக்கவில்லை என்பதற்காகவா ஒதுக்கப்படுகிறார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே.
Advertisment
Advertisements
அக்ஷராவோ இதுவரை யார் பற்றியும் அவதூறு பேசவில்லை. யாரைப் பற்றியும் யாருடனும் பெரிதாக டிஸ்கஸ் பண்ணவுமில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று எப்போதும் புன்னகைத்த முகத்தோடு இருக்கிறார். விளையாட்டுகளில் தனக்கு அதிகப்படியான டிஸ்லைக்ஸ் வந்தபோதிலும், அதனை சரிசெய்ய வீட்டில் இருந்த அனைவரிடமும் சென்று ஆலோசனை கேட்டார். அழுகை வந்தால்கூட எல்லோர் முன்பும் அழுது சீன் அதாவது கன்டென்ட் உருவாக்காமல், தனியே சென்றுதான் அழுகிறார்.
இப்படி நல்ல பண்புகள் அக்ஷ்ராவிடம் நிறையவே உள்ளன. ஆனால், அவர் மீது என்ன கோவமோ தெரியவில்லை, பொங்கி எழுகிறார் பிரியங்கா. அப்படி என்னதான் பிரச்சனை? என்னவா இருக்கும்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil