பிரியங்காவை வெளியேற்ற நினைக்கும் போட்டியாளர்கள்… என்னதான் ஆச்சு?

Bigg Boss 5 Tamil Priyanka Isiavani Chinnaponnu Nomination பிரியங்காவை அதிகமானோர் நாமினேட் செய்வதும் இதனைத் தொடர்ந்து வரும் சலசலப்புகளையும் அவர் எப்படிக் கையாளப்போகிறார்

Bigg Boss 5 Tamil Priyanka Isiavani Chinnaponnu Nomination
Bigg Boss 5 Tamil Priyanka Isiavani Chinnaponnu Nomination

Bigg Boss 5 Tamil Priyanka Isiavani Chinnaponnu Nomination : திங்கட்கிழமை என்றாலே பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரைப் பரபரப்புதான். ஆம், வீட்டில் யாரெல்லாம் இருக்கவேண்டாம் என்று நினைக்கிறார்களோ அவர்களைத் தேர்ந்தெடுத்து நாமினேட் செய்யும் நாமினேஷன் தினமாயிற்றே. அந்த வரிசையில் இன்று காலை வெளியான ப்ரோமோவில் பெரும்பாலானவர்கள் பிரியங்காவை நாமினேட் செய்வதுபோன்று காட்சிகள் இருந்தன.

எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை 18 போட்டியாளர்களைக் களமிறக்கியது பிக் பாஸ். இதில் மாடல்களின் வரவு அதிகம் என்றாலும் முதல் முறையாகத் திருநங்கையான நமிதாவின் பங்களிப்பும் இருந்தது. நிச்சயம் இம்முறை இவர்தான் வெற்றியாளர் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கையில், தவிர்க்கமுடியாத காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறினார் நமிதா. இவரைத் தொடர்ந்து நடியா சங் மற்றும் அபிஷேக் ராஜா வாக்குகளின் அடிப்படையில் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். அந்த வரிசையில் அடுத்த வாரம் எலிமினேட் செய்யப்போகும் போட்டியாளர்களை நாமினேட் செய்யும் தினமான இன்று, மிகவும் பரபரப்பாகத் தொடங்கியது எனலாம்.

ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் நாமினேட் செய்ய நினைக்கும் நபரின் புகைப்படத்தை தீயிலிட்டு எரிப்பதுபோன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்த இன்றைய முதல் ப்ரோமோவில், அதிகமான வாக்குகளைப் பெற்று நாமினேஷனில் நிச்சயம் இடம் பெரும் நபராகப் பிரியங்கா தெரிகிறார். எப்போதும் ஒன்றாகவே சுற்றிக்கொண்டிருந்த அபிஷேக்கின் வெளியேற்றம் நிச்சயம் பிரியங்காவை உடைத்திருக்கும். நிரூப்புடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதமும் பிரியங்காவிற்கு ஏமாற்றத்தைத் தந்தது. இந்நிலையில் பிரியங்காவை அதிகமானோர் நாமினேட் செய்வதும் இதனைத் தொடர்ந்து வரும் சலசலப்புகளையும் அவர் எப்படிக் கையாளப்போகிறார் என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

இந்த லிஸ்டில் சின்னப்பொண்ணு, இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சியின் பெயர்களும் உள்ளன. நீங்கள் யார் இந்த வாரம் எலிமினேட் ஆவார்கள் என்று நினைக்கிறீர்கள்? அல்லது நாணயத்தைப் பயன்படுத்தச் சொல்ல வாய்ப்பு இருக்கிறதா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil priyanka isiavani chinnaponnu nomination

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com