Bigg Boss 5 Tamil Promo Latest priyanka Niroop Iykki Berry : பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் போராட்டம், நண்பர்களுக்குள் செல்ல சண்டைகள் போன்றவை பார்த்திருப்போம். ஆனால், முதல் முறையாக ஃப்ரெண்ட்ஷிப் சண்டை அரங்கேறவுள்ளது மக்களே. இது என்ன புது கதையாக உள்ளது என்ற வியப்பில்தான் எல்லோரும் இருக்கிறோம்!
பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பித்த நாளிலிருந்து பிரியங்கா மற்றும் நிரூப் நெருங்கிய நண்பர்களாகவே வலம்வந்தனர். இவர்கள் இருவருடன் அபிஷேக் சில காலம் பயணித்தாலும், இப்போது வரை இவர்களுடைய ஃப்ரெண்ட்ஷிப் பிரிக்க முடியாத முடிச்சாகவே உள்ளது. பிரியங்காவுடன் இருந்துகொண்டே அவரிடமிருந்து நாணயத்தை எடுத்துக்கொண்டது முதல் பல்வேறு விதமான டாஸ்க்குகளில் தோழி என்றும் பாராமல், தன்னுடைய விளையாட்டை மட்டுமே கவனம் செலுத்தும் வலுவான போட்டியாளராகவே நிரூப் இருக்கிறார். ஆனால், பிரியங்காவிற்கு நிரூப் நண்பன் என்கிற எண்ணம் ஆரம்பத்திலிருந்தே உள்ளது.
இந்த வித்தியாசம்தான் தற்போது பிரியங்காவை குழப்பமடைய வைத்திருக்கிறது. கடந்த வார லக்ஜூரி டாஸ்க்கில் நிரூப்பிற்கு பக்கபலமாக இருந்து விளையாடியது ஐக்கி பெரி. தன்னை யாரால் வெற்றிபெற வைக்க முடியும் என்பதைச் சரியாகக் கணித்து, ஐக்கியை தனக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார் நிரூப். அதன்படி இருவரும் மிகச் சிறப்பாகவே விளையாடினார்கள். இதனால், நிரூப் மற்றும் ஐக்கி இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.
ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத பிரியங்கா, இவர்களுடைய திடீர் நட்பை கண்டு கடுப்பாகி புலம்பிக்கொண்டிருக்கிறார். இன்று மூன்றாவதாக வெளியான ப்ரோமோவில், தனக்கு நிரூப் மீது பொசெசிவ் அதிகமாகிக்கொண்டே போகிறது என்றும் ஐக்கியுடன் நிரூப் பேசுவது பிடிக்கவில்லை என்றும் புலம்பிக்கொண்டிருக்கிறார். மேலும், நிரூப்பிடமே சென்று, 'உங்கள் இவருடைய உறவின் அடுத்த கட்டம் என்ன?' என்று கேட்கிறார் பிரியங்கா. அதற்கு, 'நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்' என்று நிரூப் பதிலளிக்க, 'அப்படி என்றால் நான் யாரு?' என்று மீண்டும் பிரியங்கா தன் கேள்வியை முன் வைக்க, இப்படியாக அந்த ப்ரோமோ முடிவடைகிறது.
வழக்கம் போல ப்ரோமோ மாஸாக இருந்தாலும், உண்மையில் பிரியங்கா கோபப்பட்டாரா அல்லது விளையாட்டிற்காகக் கேட்டிருப்பாரா என்பது முழு எபிசோடை பார்த்தால்தான் தெரியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil