Advertisment

எப்படி இருக்கிறது பிக் பாஸ் ஷோவில் ராஜமாதா பெர்ஃபாமன்ஸ்?

Bigg Boss 5 Tamil Ramya Krishnan entry Kamal Hassan Tamil News கமல் எபிசோட் என்றால் பயபக்தியுடன் உட்காரும் போட்டியாளர்கள் நேற்று பயமாவது பயங்கரமாவது என்று ஜாலியாக இருந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss 5 Tamil Ramya Krishnan entry Kamal Hassan Tamil News

Bigg Boss 5 Tamil Ramya Krishnan entry Kamal Hassan Tamil News

Bigg Boss 5 Tamil Ramya Krishnan entry Kamal Hassan Tamil News : கொரோனா தொற்று, தொடர் மழை உள்ளிட்ட தொடர் தடங்கல்களையும் மீறி பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. முதலாம் சீசன் முதல் இப்போது நடந்துகொண்டிருக்கும் ஐந்தாம் சீசன் வரை ஒருநாள் வரை விடுப்பில்லாமல் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் கமல்ஹாசன். அவ்வளவாகப் பரீட்சையம் இல்லாத முகங்களாக இருந்தாலும், உலக நாயகன் கமல்ஹாசனுக்காகவே இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் ஏராளம். ஆனால், அதற்கும் இப்போது தடங்கல் வந்துள்ளது.

Advertisment

வெளிநாட்டிற்குச் சென்று வந்த சில நாட்களிலேயே கொரோனாவால் கமல்ஹாசன் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் கமல், சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளார். இதனால், இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கிப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விடையாக களத்தில் இறங்கி இருக்கிறார் கமலின் தோழி ரம்யா கிருஷ்ணன்.

கமல் அளவிற்கு தன்னால் நிகர் செய்ய முடியாது என்று கமலிடம் ஒப்புக்கொண்ட ரம்யா, தன்னுடைய பாணியில் மிகச் சிறப்பாகவே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆனால் என்ன, கணக்கு வாத்தியாரிடமிருந்து விளையாட்டு ஆசிரியரிடம் மாணவர்களை ஒப்படைத்துவிட்டுச் சென்ற ஒரு உணர்வு. ஆம், போட்டியாளர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர். கமல் எபிசோட் என்றால் பயபக்தியுடன் உட்காரும் போட்டியாளர்கள் நேற்று பயமாவது பயங்கரமாவது என்று ஜாலியாக இருந்தனர்.

தன்னுடைய ஸ்டைலில் அனைவரிடமும் மிகவும் கலகலப்பாக ஒவ்வொருவரைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இவ்வளவு பெரிய சுமையை தான் எப்படிக் கையாளப்போகிறோம் என்கிற படபடப்பு ரம்யாவிடம் தெரிந்தாலும், போகப்போக நிகழ்ச்சியோடு ஒன்றிணைந்துவிட்டார். நிச்சயம், வரும் வாரங்களில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் இருந்தாலும், கமல் ஹாசன் அளவிற்கு நிகழ்ச்சியை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வாரா என்பது டவுட்டுதான்!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Ramya Krishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment