scorecardresearch

பாவனிக்கு அட்வைஸ்.. நிரூப்புக்கு சர்ப்ரைஸ்.. கலக்குறீங்க பிக் பாஸ்!

Bigg Boss 5 Tamil Review Pavani Reddy Yashika entry Niroop Surprised இப்படி சிறிய க்ளூக்களை கொடுத்துவிட்டு, வழக்கம்போல தாமரையைப் பாராட்டிவிட்டுச் சென்றனர்.

பாவனிக்கு அட்வைஸ்.. நிரூப்புக்கு சர்ப்ரைஸ்.. கலக்குறீங்க பிக் பாஸ்!
Bigg Boss 5 Tamil Review Pavani Reddy Yashika entry Niroop Surprised

Bigg Boss 5 Tamil Review Pavani Reddy Yashika entry Niroop Surprised : இந்த சீசனில் போட்டியாளர்களைவிட அவர்களுடைய குடும்பங்கள் ஏராளமான சுவாரசிய கன்டென்ட்டுகளை அடுக்குகின்றனர். வீட்டில் இருக்கும் அனைவரோடும் ஒற்றுமையாக அமர்ந்து பேசுவதே பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. அந்த வரிசையில் நிரூப்பிற்காக ஸ்பெஷல் என்ட்ரி யாஷிகா மற்றும் பாவனி, வருண், பிரியங்கா குடும்பத்தினரின் விசிட் நேற்றைய எபிசோடை மிகவும் எமோஷனலாக்கியது.

இரண்டு நாள்கள் முன்பே யாஷிகாவின் என்ட்ரி ப்ரோமோவில் வந்தது. ஆனால், நேற்றுதான் அவரை நமக்கு காண்பித்தார் பிக் பாஸ். ப்ப்பா… யாஷிகாவை பார்த்ததும் என்ன ஒரு ஆனந்தம் நிரூப்பிற்கு. எண்ணிக்கையில்லா வாட்ஸ் பல்பு அவர் முகத்தில் பிரகாசித்தது. நிரூப் எந்த அளவிற்கு யாஷிகாவை விரும்புகிறார் என்பது அவருடைய கண்களிலேயே வெளிப்பட்டது. வார்த்தைக்கு வார்த்தை ‘பாப்பா பாப்பா’ என்று யாஷிகாவை அழைத்தது, கியூட். யாஷிகாவும், நிரூப்பிற்காகதான் வந்தார் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். வீட்டில் இருப்பவர்கள் முதற்கொண்டு யாஷிகாவை விசாரித்தபடி நகர்ந்த நொடிகள் யாவும் மிகவும் பாசிட்டிவாக இருந்தது.

தனக்கு இந்த பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது யாஷிகாவால்தான் என்று நேற்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் நிரூப். என்னதான் வாய்ப்பு கிடைத்தாலும், அவர் இந்த அளவிற்குப் பயணித்து வந்ததற்கான காரணம் நிரூப் மட்டும்தான். இப்போது முன்பு போல இல்லை, நன்றாக விளையாடவேண்டும் என்று யாஷிகவே சொன்னபிறகு இனி சும்மா இருப்பாரா நிரூப்! மீண்டும் பழைய நிரூப்பைப் பார்க்கலாம் என்கிற நம்பிக்கை உண்டு. இறுதியாக, முடியை வெட்டு என்றபடி வீட்டை விட்டு வெளியேறினார் யாஷிகா. அவர் முகம் மறையும்வரை நிரூப் யாஷிகாவையே தரிசித்துக் கொண்டிருந்தார். போதும் நிரூப் போதும்!

பிறகு, வருணிடைய பிறந்தநாள் கேக்கிற்கு வருணே நீண்ட நேரம் காத்திருந்து, பிறகு தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார். காலையில் அவருடைய தாய் நேரில் வந்து வாழ்த்த, மிகவும் நெகிழ்ந்துபோனார் வருண். அம்மா பாடல் ஒலித்தவுடன், பிரியங்காவின் ஏக்கம் கண்ணீர் வழியாக வெளிவந்தது. எவ்வளவுதான் பிரியங்காவை சோதிப்பார் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் அம்மா பாடல் ஒலிக்கும்போதெல்லாம் தித்திக் மொமென்ட்டுகளாகத்தான் ப்ரியங்காவிற்கு இருந்தது. அப்படியே நேற்றைக்கு ஒருவழியாக ஏமாற்றாமல் பிரியங்காவின் அம்மாவையும் அழைத்தார் BB.

குடும்பத்தின் பெயரைக் காப்பாற்றிவிட்டாய் என்று வருணிடம் அவருடைய தாய் கூறிக்கொண்டிருந்தார். அப்படி என்ன பிரமாதமாக வருண் செய்தார் என்பதுதான் தெரியவில்லை. ஒருவேளை, எதுவும் செய்யாமல் சமத்தாக இருந்ததே பெரிய விஷயமென்று கூறியிருப்பார்களோ! தேர்தல் கள பிரச்சாரத்தின்போது நடந்த சண்டையின் ஒரு பகுதியாக பிரியங்காவைத் தள்ளிவிட்டது அபிநய்தான் என்று போட்டுடைத்தனர் வருணின் குடும்பத்தினர். இப்படி சிறிய க்ளூக்களை கொடுத்துவிட்டு, வழக்கம்போல தாமரையைப் பாராட்டிவிட்டுச் சென்றனர்.

பாவனியுடைய அக்கா, அலெர்ட் என்கிற பெயரில் மேலும் பாவனியை குழப்பிவிட்டுதான் சென்றார். ராஜு மற்றும் அமீரின் உரையாடலைக் கூறிவிட்டு, ஜாக்கிரதையா இரு என்று வார்னிங் கொடுத்துவிட்டுச் சென்றனர் பாவனியின் குடும்பத்தினர். இவர்களிடம் எமோஷனல் கன்டென்ட் இல்லையென்றாலும், ஒருவித அலெர்ட் டோன் வெளிப்பட்டது. இருக்கத்தானே செய்யும்! இனி பாவனி அப்படி அமீரிடம் நடந்துகொள்ளப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நாம சும்மா இருந்தாலும் நம்மைச் சுற்றி உள்ளவர்கள் சும்மாவே இருக்கமாட்டார்கள் என்பதுபோல, பாவனி மற்றும் அமீர் இடையே பேச்சுவார்த்தையைத் தூண்டினார்கள் ஹவுஸ்மேட்ஸ். அப்போது, ‘என் பின்னால் அலைந்து நீதான் டயர்ட் ஆவ. அதனால் விட்டுவிடு’ என்றார் பாவனி. இதை அப்படியே அமீர் விட்டுவிட்டால் அமீருடைய பெயருக்கு எந்த களங்கமும் ஏற்படாது. என்ன நடக்கப்போகிறதோ! என்றாலும், பாவனி தன்னை நெருங்கும் நபர்களைக் கையாளும் விதம் பற்றி நேற்று தெளிவாகவே கூறினார். அவரை பொறுத்தவரைக்கும் அவர் எந்த உறவிலும் ஈடுபாடு காட்டவில்லை, அதை மெலிதான டோனில் கூறிவிட்டு இயல்பாக இருக்கிறார். இதுதான் பாவனி! புரிஞ்சிக்கோங்கப்பா!

அடுத்ததாகத் தூங்குவதற்குப் பஞ்சாயத்து நடந்தது. வீட்டின் தலைவரான தாமரை, மற்றவர்களைத் தூங்க விடாமல் இருக்க கத்திக்கொண்டே இருந்தார். இது அக்ஷரா உட்பட பலருக்கும் இரிடேட் ஆக, அதை அவரிடமே கூறினார் அக்ஷரா. என்றாலும், ‘சொன்ன பேச்சு கேட்டா நான் ஏன் கத்தப்போறேன்!’ என்று நம்மை நம் அம்மா சிறுவயதில் கத்துவதுபோன்ற டோனில் சொன்னார் தாமரை. என்ன கத்தி என்ன பிரயோஜனம்.. ராஜு தூங்கிவிட, நாய் கத்திதான் எழுந்தனர். வெரி பேட்!

இறுதியாகப் பிரியங்கா குடும்பத்தினர் வந்து வீட்டையே ஒருவழி படுத்திவிட்டனர். எப்போதும் குறும்புத்தனம் செய்துகொண்டே இருக்கும் பிரியங்காவின் குடும்பமும் அவருக்கு சளைத்தவர்கள் அல்ல. நிரூப் எப்படி தன்னை ரீப்லேஸ் செய்யலாம் என்று தன்னுடைய தம்பி கோபித்துக்கொண்டது முதல், தாய் மடிமீது ஏறி பிரியங்கா அமர்ந்தது வரை கலகல குடும்பமாகவே இருந்தது. ஒருவழியாக அழுகையை நிறுத்தினார் பிரியங்கா! கத்துவதை தெய்வசெய்து குறைத்துக்கொள்ள என்று நம் சார்பாக பிரியங்காவின் தம்பி அவரிடம் கூறி விடைபெற்றனர். கப்பு முக்கியம் பிகிலு என்றபடி பிரியங்காவிற்கு ஊக்கத்தையும் கொடுத்தனர். ஆகமொத்தத்தில், நேற்று லவ்லி ஹோம் இந்த போக பாஸ் ஹோம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 5 tamil review pavani reddy yashika entry niroop surprised