scorecardresearch

தாமரை கேம் ஸ்டார்ட்ஸ்… ஆனால், இதை கேட்க ரம்யா கிருஷ்ணன் மறந்துவிட்டாரே!

Bigg Boss 5 Tamil Review Ramya Krishnan Ikki Elimination Thamarai போகிற போக்கில் அக்ஷரா தெலுங்கில் டயலாக் சொல்லுகிறேன் அதை சொல்லுங்க என்று ராஜுவிடம் சொன்னதையே ஒரு டாஸ்க்காக வைத்து, ராஜூவை படுத்தி எடுத்துவிட்டனர்.

Bigg Boss 5 Tamil Review Ramya Krishnan Ikki Elimination Thamarai
Bigg Boss 5 Tamil Review Ramya Krishnan Ikki Elimination Thamarai

Bigg Boss 5 Tamil Review Ramya Krishnan Ikki Elimination Thamarai : ‘யாரும்மா இந்த தாமரை? எங்கே இருந்தீக? பிரியங்காவிற்கே டஃப் கொடுக்குறாங்களே!’ என்றுதான் நேற்றைய எபிசோட் பார்த்த பிறகு அனைவரின் மைண்ட் வாய்ஸாக இருந்தது. அந்த அளவிற்கு, பிரியங்கா செய்த அணைத்து விஷயங்களையும் எதிர்த்து  கேள்விகளை அடுக்கினார். உண்மையில் நிரூப் பிரியங்கா நண்பர்கள்தானா என்பதில் தாமரைக்கு எழுந்த கேள்விதான் அனைத்திற்கும் காரணம். நமக்கே ஏராளமான இடங்களில் அந்த சந்தேகம் எழாமல் இல்லை. என்றாலும், தன்னிடம் யாரும் இந்த அளவிற்கு அன்பு செலுத்தியதில்லை, அதனால் தான் தடுமாறுவதாக நிரூப் தெளிவுபடுத்தினார். இப்படி ஏகப்பட்ட குழப்பங்களுக்கு விளக்கங்களும், விடைகளும் கிடைத்தாலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் சீரியஸாக டிஸ்கஸ் செய்த ராஜு, பாவனி மற்றும் அபிநய் விஷயம் பற்றி ரம்யா கிருஷ்ணன் கேட்காமல் போனது ஏமாற்றமே!

போட்டின்னு வந்துட்டா எப்படி நண்பர்களை விட்டுக்கொடுக்க முடியும்? என்கிற கேள்வி தாமரையை வாட்டுகிறது போல. வருண், அக்ஷரா எனப் பார்ப்பவர்களிடம் எல்லாம் இந்த கேள்வியைக் கேட்டு அவர்களையும் குழப்பிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில், என்ன சந்தேகம் என்றாலும் அதனை பிரியங்காவின் மூஞ்சிக்கு நேரா கேட்டு சரிசெய்துகொள்ள என்று அக்ஷரா தாமரையிடம் சொல்ல, அதற்கும் அப்படி பாப்பா இப்படி பாப்பா என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார் தாமரை.

தாமரை மட்டும்தான் தன்னுடைய மனக்குமுறலைக் கொட்டி தீர்ப்பாரா என்ன? பிரியங்காவும் தாமரையின் அசத்தலான பேச்சைக் கேட்டு ஷாக்க்கில் உறைந்திருந்தார். இவரை ஏற்றி விடும் வகையில் அபிஷேக் ஏராளமான உருட்டுகளை உருட்டினார். அதிலும், மிகவும் பிரபலமானவரை டார்கெட் செய்தால் தாமரைக்கு நற்பெயர் கிடைக்கும் என்கிற ஸ்ட்ராடஜி தாமரையுடையது என்று சொன்னதெல்லாம், ஐடியா இல்லாதவர்களுக்கும் ஐடியா கொடுக்கும் கதை.

அடுத்ததாக சஞ்சீவுக்கான ஸ்பெஷல் டாஸ்க். வீட்டில் இருப்பவர்களுக்கு ரேங்க் அடிப்படையில் பேட்ச் கொடுப்பது. எவ்வளவு துல்லியமாகக் கணிக்க முடியுமோ அந்த அளவிற்கு மிகவும் அழகாகவே கணித்து அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகவும் சிறப்பாகவே செய்தார். பேசாமல் நீங்களே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருக்கலாம் சஞ்சீவ்.

இதையடுத்து, ஆசிரியர்களுக்கான திருக்குறள் டாஸ்க். இம்முறை பிக் பாஸ் நம்முடைய திருக்குறளை அதிகளவில் ப்ரொமோட் செய்கிறார். நல்ல விஷயம். ஆனால், இந்த டாஸ்கை எந்த அளவிற்கு சீரியஸாக எடுத்துக்கொண்டனர் என்பது கேள்விக்குறிதான். ராஜு அக்ஷராவிற்கு சொல்லிக்கொடுத்த குறல்கள் யாவும் எளிமையானவை மற்றும் நாம் அடிக்கடி கேட்டவை. என்றாலும் அக்ஷராவிற்கு அவை புதுசு. அதேபோல உங்களுக்கும் கொடுக்குறேன் பாருங்க என்பது போல இருந்தது, ஆசிரியர்களுக்கென பிக் பாஸ் தேர்வு செய்திருந்த குறல்கள். ‘என்னையா வெச்சு செஞ்சீங்க? இப்போ செய்றேன் பாருங்க’ என்று ஆசிரியர்களை அந்த குறள்களை மனப்பாடம் செய்ய விடாமல் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார் அக்ஷரா.

அப்படியே இரண்டு குறள்களைத் திணறிச் சொல்லி அதிகப்படியான குறள்களை கூறிய புலவர் பட்டத்திற்கு சொந்தக்காரரானார் அமீர். தமிழ் ஆசிரியர் முதற்கொண்டு வெரி யாராலும் ஒரு குறளுக்கு மேல் சொல்ல முடியவில்லை என்பது வருத்தமே. என்ன செய்வது எல்லாம் டாக்ஸ் செயல்! திருகுறளோடு விட்டார்களா? போகிற போக்கில் அக்ஷரா தெலுங்கில் டயலாக் சொல்லுகிறேன் அதை சொல்லுங்க என்று ராஜுவிடம் சொன்னதையே ஒரு டாஸ்க்காக வைத்து, ராஜூவை படுத்தி எடுத்துவிட்டனர். இப்படியெல்லாமா டாஸ்க்கை சுடுவாங்க!

பிறகு, ரேங்க் கார்டு அடிப்படையில் பாவனை, அண்ணாச்சி மற்றும் தாமரை காப்பாற்றப்பட, நிரூப் மற்றும் ஐக்கி டேஞ்சர் ஜோனில் இருந்தனர். இதனையடுத்து பிரேக் விட்டதும் போதும், தான் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவேன் என்று இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டனர். இது நிரூப்பிற்கான பாடம் என்று அபிநய் மற்றும் பாவனி டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தனர். ஆனால், தாமரை ஐக்கி பெரிக்காக வருந்திக்கொண்டிருந்தார். ஆனால், என்ன செய்வது? ஐக்கி பெரிதான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார். எல்லோரிடமும் அளவோடு பேசி பழகிய ஐக்கி, இதுநாள் வரை யாருடைய வெறுப்பையும் வீட்டில் சம்பாதிக்கவில்லை என்பதே நிதர்சனம். வீட்டில் மட்டுமில்ல, நாட்டிலும் அவரை பற்றிய பெரிதாக எந்த ஒபினியனும் இல்லை.

ராப் பாடகி என்பதால், வீட்டில் இருந்த நாட்களில் நிறைய பாடியிருக்கலாமோ என்ற கேள்விதான் மனதில் எழுந்தது. ஏராளமான திறமைசாலிகள் இருந்தும், ஆடல், பாடலுக்கு இந்த சீசன் பஞ்சத்தையே சுமத்திருக்கிறது. என்னதான் சொல்லுங்க, கடந்த வாரம் முழுவதும் சோஷியல் மீடியாவே அதிர்ந்த ஒரு விஷயம் என்றால், அது ராஜு அபிநயிடம் அவர் பாவனியைக் காதலிக்கிறார் என்று கேள்வி கேட்டது சரியா தவறா என்பதுதான். ஆனால், அதைப்பற்றி ராஜமாதா எதுவும் கேட்காமல் போனது ஏன் என்றுதான் தெரியவில்லை. மறந்திருக்க வாய்ப்பில்லையே! சரி கடந்தது கடந்துவிட்டது. சீக்ரெட் அறையை ஐக்கி பயன்படுத்துவார் என்று எதிர்பார்த்தோம் ஆனால், அதனுவும் நடக்கவில்லை. இன்று கேப்டன்சி டாஸ்க், நாமினேஷன் என பிஸியாக இருக்கும். என்ன நாடாகும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 5 tamil review ramya krishnan ikki elimination thamarai

Best of Express