ஒரு குழந்தைக்கு தந்தை அபினய்.. பாவனியுடன் முடிச்சுப் போட்டு ராஜு பேசியது சரியா?

ராஜூவின் இந்த கேள்வியை பாவனியும், அபினய்-யும் மனதில் வைத்து தக்க நேரத்தில் பதிலடி கொடுப்பார்களா?

விஜய் டிவியில் தினமும் இரவு 10 மணிக்கு பிக்பாஸ் சீசன் -5 ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற 4 சீசன்களை போல காதல், அன்பு கேங், பாய்ஸ் கேங் இல்லாமல் இந்த சீசன் தனித்துவமாக இருக்கிறது. அதற்கு காரணம் வீட்டிலுள்ள அனைவரும் அவரவர் விளையாட்டை அவரவர் விளையாடுவது தான். இதுவரை நாடியா சாங், நமீதா மாரிமுத்து, அபிஷேக்,  மதுமிதா, சுருதி, சின்னபொண்ணு, இசைவாணி ,ஆகியோர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே எதிர்பாரதவிதமாக வீட்டை விட்டு வெளியேறிய அபிஷேக், வைல்ட்கார்டு மூலம் மீண்டும் வீட்டுக்குள் வந்தார்.  அவரைத் தொடர்ந்து விஜய் டிவியின் பிரபல கொரியோகிராஃபர் அமீர் மற்றும் நடிகர் சஞ்சீவ் ஆகியோர் வைல்ட்-கார்டு எண்ட்ரி மூலம் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

இப்படி பலத் திருப்பங்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே, சின்னத்திரை நடிகரான ராஜூ தனது நகைச்சுவையான கேரக்டர் மூலம் ஏராளமான ரசிகர்களை பிடித்துவிட்டார். ஆரம்பத்தில் காணாமல் இருந்த வருண், அபினய் ஆகியோரும் தங்களது விளையாட்டை ஆரம்பித்து விட்டனர். பாவனியை பொறுத்தவரை முதலில் இருந்தே வீட்டில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அதனால் அவர் இன்னும் யாருடனும் ஜெல் ஆனது போல் தெரியவில்லை. ஐக்கி யாரிடமும் எந்த சச்சரவும் இல்லாமல், மிகவும் அமைதியாக தன்னுடைய ஆட்டத்தை ஆடிவருகிறார்.

பிரியங்கா, நிரூப் இருவரும் மாறிமாறி சண்டைப்போட்டுக் கொண்டாலும் இறுதியில் இணக்கமாகி விடுகின்றனர். அண்ணாச்சியால் இதுவரை யாருக்கும் எந்த பிரச்சனையும் வராததால், அவர் இன்னும் வீட்டுக்குள் இருக்கிறார்.  அக்‌ஷாராவுக்கு சிபியுடன் ஆரம்பத்திலிருந்தே கருத்து மோதல் இருந்து வருகிறது. இவர்களில் யார் வெளியேறுவார் எனத் தெரியவில்லை. அதிசயமாக பிக்பாஸ் விளையாட்டை பற்றி முன்பின் அறியாத தாமரை பின்னர் சில நுனுக்கங்களை தெரிந்துகொண்டு இன்னும் வீட்டுக்குள் இருக்கிறார்.

இப்படி பிக்பாஸ் ஒரு வழியாக சென்று கொண்டிருக்க சமீபத்தில் வெளியான ப்ரொமோ-வை பற்றித் தான் ரசிகர்கள் சலசலக்க தொடங்கியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டிலுள்ள அனைவரும் ட்ரூத் ஆர் டேர் கேம் விளையாடுகின்றனர். அப்போது ராஜூ பாட்டிலை உருட்ட அது அபினய்-யின் பக்கம் திரும்புகிறது. இதைத் தொடர்ந்து ராஜு அபிநய்-யிடம் கேட்கும் கேள்விகள் தான் அத்தனை சலசலப்புக்கும் காரணம்.

ராஜூ, அபினய் -யை பார்த்து பாவனி-யை லவ் பண்றீங்களா என்று கேட்கிறார். அதைக்கேட்டு ராஜூ, பாவனி உட்பட வீட்டிலிருக்கும் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

வெளியே இருக்கும் ஆடியன்ஸ் என்ன நினைப்பார்கள் என்பது ராஜூவுக்கு நன்றாக தெரியும். ராஜூ தாமரைக்கு கூறும் அறிவுரைகளை அதற்கு சிறந்த உதாரணம்.

அபினய்-யை பொறுத்தவரை மிகவும் சாதுவாணவர். மிகவும் அன்பான கணவர். பொறுப்பான அப்பா. பிக்பாஸ் வீட்டில் அவர் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தது. இதனால் வாராவாரம் நாமினேஷனும் செய்யப்பட்டார். அபினய் சீக்கிரமே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வருவார் என யூகிக்கப்பட்டது. ஆனால், போகபோக சுதாரித்துக் கொண்டு அபிநய் தன்னுடைய ஆட்டத்தை நன்றாகவே ஆடிவருகிறார்.

இப்படி எதையும் சரியாக யோசித்து பேசுக்கூடிய ராஜூ, ஏன் அபினய் -யிடம் இப்படியொரு கேள்வி கேட்டார் என்பது யாருக்குமே புரியவில்லை. ஆனால் பிக்பாஸ் ஆரம்பித்த புதிதில், இதே கேள்வியை பாவனியும் ஒருமுறை அபினய்யுடன் இலைமறைக் கனியாகக் கேட்க அதற்கு அபிநயும் சூசமாக இல்லை என்றே பதில் கூறிவிட்டார்.

ராஜூவை பொறுத்தவரை, அவர் தொடர்ந்து பாவனியை நாமினேஷன் செய்து வருகிறார். நீங்க ஃபேக்கா இருக்கீங்க என பலமுறை பாவனிக்கு நேரே சொல்லிருக்கிறார். தற்போது பாவனியை சிக்கவைக்கத் தான் அபினய்-யிடம் இப்படியொரு கேள்வியை ராஜூ கேட்டிருக்கிறார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

ராஜூவின் இந்த கேள்வியை பாவனியும், அபினய்-யும் மனதில் வைத்து தக்க நேரத்தில் பதிலடி கொடுப்பார்களா? இல்லை மறந்து செல்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil review today raju questioned abhinaya if he loves bhavani

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express