/tamil-ie/media/media_files/uploads/2021/12/Bvup.jpg)
Bigg Boss 5 Tamil Ticket to Finale Task Niroop Thamarai Tamil news
Bigg Boss 5 Tamil Ticket to Finale Task Niroop Thamarai Tamil news : ஒருவழியாக இனி கேம் ஆடப்போவதாக தன் வாயாலேயே பாவனியிடம் ஒப்புக்கொண்டார் அமீர். ஆனால், என்றைக்கும் இல்லாமல் பாவனியின் பேச்சு மிகவும் தெளிவாக இருந்தது. இவ்வளவு நாள் இந்தத் தெளிவு எங்கே போனது? இப்பொழுதாவது இருவரும் தெளிந்தார்களே என்று நிம்மதி பெருமூச்சு விடலாம். அதிலும், 'நீயே ஆரம்பித்து வைத்து, இப்போது நீயே இவ்வளவு பண்ணுகிறாய்' என்று பாவனி கேட்டது, பளார் பளார் என்று அமீருக்கு விழுந்திருக்க வேண்டும். ஆனால், தன்னை கேம் விளையாட விடாமல் தனக்கு இடையூறாக இருக்கிறார் என்றுகூறி நாமினேட்டும் செய்தார் அமீர். என்ன இதெல்லாம் அமீர்? பாவனியைப் பார்த்தால் பாவமாக இல்லையா?
அடுத்ததாக ஓபன் நாமினேஷன். அனைவரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் தேன் தடவிய வார்த்தைகளை கூறி நாமினேட் செய்தனர். அமீர் பாவனியையும், பிரியங்கா நிரூப்பையும் நாமினேட் செய்தது, வேற லெவல் ஸ்ட்ராடஜியாகவே இருந்தது. ஆனால், எல்லோருடைய மூக்கும் உடைபடுகிற அளவிற்கு, 'இப்படி நாமினேஷன் செய்யச்சொல்லி சும்மாதான் விளையாடினேன்' என்றபடி வீட்டில் இருக்கும் எல்லோரையும் நாமினேட் செய்தார் பிக் பாஸ். உங்க விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாமல் போகிறது பிக் பாஸ்!
அமீர் பாவனியை நாமினேட் செய்தது யாரால் ஏற்றுக்கொள்ள முடிந்ததோ இல்லையோ, பிரியங்காவிற்கு மிகுந்த மன வருத்தமாக இருந்தது போல. அதை அப்படியே பாவனியிடம் கூற, என்னை யார்தான் நாமினேட் செய்யவில்லை என்றபடி மிகவும் கூலாக பதிலளித்தார் பாவனி. இப்படி மிகவும் நிதானமாகவும் சரியாகவும் பாவனி பேசியது நேற்றுதான்.
இதையடுத்து டிக்கெட் டூ ஃபினாலேவுக்கான டின்னர் பார்ட்டி டாஸ்க். ஆனால், அதிலிருக்கும் வில்லங்கம் தெரியாமல் டின்னருக்கு மிகவும் சந்தோஷமாகத் தயாராகினர்.நேரடியாக ஃபைனலுக்கு போக தகுதி இல்லாத ஆள் யாரென்று அவர்களுக்குள்ளேயே தேர்வு செய்து வெளியேற்றவேண்டும் என்பது டாஸ்க். இதில், முதலாவதாக நிரூப்பிற்கு எதிரான தன் கருத்தைக்கூறித் தொடங்கி வைத்தவர் சிபி. ஆரம்பத்திலிருந்து சிபிக்கும் நிரூப்பிற்கும் என்ன பனிப்போரோ தெரியவில்லை. சிபி பற்றவைத்து நெருப்பு, நிரூப்பை இந்த ஃபினாலே டாஸ்க்கிலிருந்து விளக்கியது.
ஆனால், அதற்குள் பாவனிக்கும் தாமரைக்கும் ஒருபக்கம் வாக்குவாதம் நடந்தது. இப்போது வரை தனக்கு விளையாட்டு புரியவில்லை என்று தாமரை கூறுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி எப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தால் சஞ்சீவ் போல கோபம் வரத்தான் செய்யும். எதுவுமே தெரியாமல் இவ்வளவு தூரம் நிச்சயம் தாமரையால் பயணித்திருக்க முடியாது. ஒவ்வொரு முறையும் மக்களின் ஆதரவு தனக்குக் கிடைப்பதனால், அதனை மிஸ் செய்துவிடக்கூடாது என்பதற்காக ஏதேதோ நேற்று உளறினார் என்பது மட்டும் அப்பட்டமாகத் தெரிந்தது.
என்னதான் ஆனாலும் வருண் மற்றும் அக்ஷராவின் இடத்தை நிரூப் எடுத்துக்கொண்டார். ஆம், தாமரை அல்லது நிரூப் இருவரில் யார் இந்த டாஸ்க்கில் வெளியேற்றுவது என்று மற்ற ஹவுஸ்மேட்ஸ் டிஸ்கஸ் செய்துகொண்டிருக்க, நிரூப் தாமரைக்கு விட்டுக்கொடுப்பதாகக் கூறினார். இறுதியாக, நிரூப்பை அனைவரும் பிளான் செய்து வெளியேற்றிவிட, தாமரை இந்த டிக்கெட் வாங்குவதற்குத் தகுதியானவராகத் தேர்வு செய்யப்பட்டார். எப்படியோ, ஒன்னும்தெரியாது என்றுகூறிக்கொண்டே எல்லாவற்றையும் சாதித்துவிடுகிறார் தாமரை.
இதற்கிடையில், பிரியங்கா நிரூப்பிற்கும் வாக்குவாதங்கள் முற்றியது. நிரூப் கூறியதுபோல, பிரியங்காவிற்கு இந்த கேம் ஷோ வெறும் பாக்கெட் லிஸ்ட் மட்டுமே. ஆனால், நிரூப் போன்ற வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு. அதுமட்டுமின்றி, ஏற்கெனவே சஞ்சீவ், பிரியங்கா ஆகியோருக்கு மக்களிடத்தில் நல்ல பெயர் உண்டு. இதையறிந்து கூட இவர்களில் ஒருவர் விட்டுக்கொடுத்திருக்கலாம். ஆனால், வாய்ப்பிற்காக காத்திருக்கும் நிரூப் மற்றும் தாமரையை இந்த விளிம்பிற்குக் கொண்டு வந்தது மற்ற போட்டியாளர்களின் ஸ்ட்ராடஜிதான். வலுவான நபரை காலி செய்துவிட்டால், அவர்களுக்கு மற்றதெல்லாம் சுலபம்தான்!
இறுதியாக, சென்ற சீசனில் ஆரி கத்தியது போல, இம்முறை நிரூப் திடீரென கத்தி தன்னுடைய ஸ்ட்ரெஸ்ஸை போக்கிக்கொண்டார். இதெல்லாம் வைத்துக் கணக்கிடும்போது ஒருவேளை நிரூப் இந்த வாரம் வெளியேறிவிடுவாரோ!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.