பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிற நிலையில், புதிய போட்டியாளர்களாக குக் வித் கோமாளி பிரபலங்கள் புகழ் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு எலிமினேஷனுக்குப் பிறகு 'பிக் பாஸ் தமிழ் 7' நிகழ்ச்சியின் தீபாவளி வார இறுதி சில அதிர்வுகளுடன் முடிவடைந்துள்ளது. இந்த வார இறுதியில் நிக்சனுடன் சில காதல் தருணங்களைக் கொடுத்த வீட்டில் இருந்த இளைய போட்டியாளர்களில் ஒருவரான ஐஷு வெளியேற்றப்பட்டார்.
/indian-express-tamil/media/post_attachments/268dc9a9-3f7.jpg)
மேலும் கமல்ஹாசன் தனது பாலினமற்ற ஆடைகளுடன் அவர் மேற்கொண்ட சோதனைகள், பிரதீப் பிரச்சினையை அவர் கையாண்ட விதம் குறித்த அவர் மீதான விமர்சனங்களுடன் பேசு பொருளாக மாறியது.
இந்தநிலையில், இந்த வாரத்தின் முதல் ப்ரோமோ வெளியானது. ப்ரோமோவில் ஆச்சரிய அம்சமாக பிக் பாஸ் வீட்டில் இரண்டு 'குக் வித் கோமாளி' பிரபலங்கள் காணப்படுகின்றனர். அவர்கள் வேறு யாருமல்ல விஜய் டிவி பிரபலங்களான புகழ் மற்றும் ஸ்ருஸ்டி டாங்கே.
/indian-express-tamil/media/post_attachments/5ea0e6f0-e54.jpg)
ப்ரோமோவில், புதிய கேப்டன் தினேஷ் இன்றைய டாஸ்க்கைப் படிக்கிறார். கொளுத்தி போடு பட்டாச என்ற டாஸ்க்கில், போட்டியாளர்கள், ஒரு பெட்டிக்குள் இருந்து ஒரு வெடியை எடுக்க வேண்டும். அந்த வெடியை சக போட்டியாளர்களுடன் ஒப்பிட வேண்டும்.
/indian-express-tamil/media/post_attachments/ca6066db-3c4.jpg)
முதலில், பூர்ணிமாவுக்கு 'ஒரே இடத்தில் வெடிக்கும், ஒரே இடத்தில் சிதறும்' என்ற பட்டாசு ஒன்றை விசித்ரா வழங்கினார். 'பறந்து வெடிக்கும் என்று நினைக்கலாம், ஊர்ந்து செல்லும்' என்ற வெடியை மாயா எடுத்து அர்ச்சனாவிடம் கொடுத்தார். இதையடுத்து பட்டாசு எடுக்க வரும் பிரபலங்களை காட்டுவதுடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது.
இதனிடையே, போட்டியாளர்களிடையே புகழும், ஸ்ருஷ்டியும் காணப்படுகின்றனர். இதனையடுத்து இந்த இரண்டு குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் பிக் பாஸ் சீசன் 7இல் புதிய வைல்ட் கார்டு என்ட்ரிகளா அல்லது அவர்களின் வரவிருக்கும் திரைப்படங்களில் ஒன்றை விளம்பரப்படுத்த வீட்டிற்குள் வந்திருக்கிறார்களா என்ற யூகங்கள் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“