பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிஷோடில் என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
நேற்றைய எபிசோடில் ஜோவிகா, விஷ்ணு விஜயிடம் ஒரு பொருளைக் கொடுத்து பிரீசரில் வைக்கச் சொல்கிறார். ஆனால் விஷ்ணு அதை பிரிட்ஜில் வைத்து விடுகிறார். இதனையடுத்து விஷ்ணு விஜய்க்கு பிரிட்ஜ் எது? பிரீசர் எது? என தெரியவில்லை என கலாய்க்கிறார்.
இதற்கு விஷ்ணு விஜய் இந்த பொண்ணு என்னை என்ன நினைச்சுக்கிட்டு இருக்கு. எப்ப பார்த்தாலும் இதப் பண்ணு, அத பண்ணு என வேலைக்காரன் மாறி வேலை சொல்லிக்கிட்டு இருக்கு. கேப்டன்கிட்ட சொல்லி வைக்கச் சொல்ல வேண்டியது தானே. அதைவிட எப்ப பார்த்தாலும் வாடா, போடா என சொல்லுது. வயசுல பெரியவனு மரியாதை கிடையாதா? சார் என கூப்பிட வேண்டாம். பேர் சொல்லியோ, வா, போ என கூப்பிடலாம். இது எல்லாத்துக்கும் ஒரு நாள் இருக்கு என கோவமாக பேசுகிறார். ஆனால் இதை எல்லாம் ஜோவிகா கண்டுக்கவே இல்லை.
அடுத்ததாக இந்த வாரத்திற்கான கேப்டனாக எதிர்ப்பார்த்தது போலவே யுகேந்திரன் வெற்றி பெறுகிறார். இதற்காக வைக்கப்பட்ட போட்டி சரியாக நடக்கவில்லை என மாயா குற்றம்சாட்டுகிறார். ஆனால், கேப்டன் விக்ரம் நான் சரியாகத் தான் முடிவெடுத்தேன் என்று மல்லுக்கட்டுகிறார். பின்னர் கமல்ஹாசன் வந்து விக்ரம் எடுத்த முடிவு சரிதான் என விளக்குகிறார்.
இந்த வாரம் முழுக்க டென்ஷனாவே இருந்தது ஏன் என விஷ்ணு விஜயிடம் கேட்கிறார் கமல்ஹாசன். அதற்கு அவர், என்னை சோர்வானவர் என சொல்லி சரவணவிக்ரம் உள்ள அனுப்பிவிட்டான் என்கிறார். அப்படினா நீங்க யாருக்கு கொடுப்பீங்க என கேட்க, எப்ப பார்த்தாலும் முடியலனு சொல்லி படுத்துக்குற அக்ஷயாவுக்கு கொடுப்பேன் என்கிறார் விஷ்ணு.
பின்னர் விஷ்ணுவிடம் கமல்ஹாசன் எல்லாருக்கும் பட்டப் பெயர் வைக்கச் சொல்கிறார். அதற்கு விஷ்ணு தொட்டச்சிணுங்கி பிரதீப், ரம்பம் விசித்ரா, சுயபுத்தியில்லாதவர் வினுஷா என்று கூறுகிறார். உடனே கமல்ஹாசன் அது போன வாரம், இந்த வாரம் சுயபுத்தியில்லாதவர் பட்டம் யாருக்கு கொடுப்பீங்க என கேட்க, பட்டென ஜோவிகா பெயரைச் சொல்கிறார் விஷ்ணு. ஏன் என கமல்ஹாசன் விளக்கம் கேட்க, ஜோவிகா நான் எல்லாம் பண்ணுவேன், நான் முன்னாடி தெரியனும் என எல்லாத்தையும் பண்ணுகிறார் என விஷ்ணு கூறுகிறார்.
பின்னர், விஷ்ணுவிடம் ஏன் அப்படி சொன்னீங்க என ஜோவிகா கேட்க, நீ என்ன வாடா போடானு மரியாதை இல்லாம பேசுற, நான் உன்னை வாடி போடினு சொல்றேனா என ஆவேசமாக பேசுகிறார். ஜோவிகா சமாதானப்படுத்த முயன்றாலும், உனக்கு யார்கிட்டயும் மரியாதையா பேசத் தெரியலை என கோபமாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார். பின்னர் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் செய்த ஸ்ட்ரைக் பற்றி கமல்ஹாசன் விவாதித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.