பிக் பாஸ் வீட்டில் பெண்களின் பாதுகாப்பு காரணமாக, போட்டியாளர் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் கூறிய நிலையில், 16 வயது ரேகாவுக்கு லிப்லாக் கிஸ் கொடுத்த கமல்ஹாசன் பெண் பாதுகாப்பு பற்றி பேசலாமா யுகேந்திரன் மனைவி ஹேமா மாலினி கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் பிரதீப் ஆண்டனி இருப்பது தங்களுக்கு பயமாக இருப்பதாகவும், அவர் தவறான வார்த்தைகள் உபயோகிப்பதாகவும், சக போட்டியாளர்களை இழிவாக பேசுவதாகவும் பிரதீப் மீது பெண் போட்டியாளர்கள் உட்பட அனைவரும் குற்றம்சாட்டினர்.
பிக் பாஸ் சீசன் 7 சீசனில் சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில், தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் போர்க்கெடி் தூக்கிய போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதையடுத்து, கமல்ஹாசன், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து, பெண் போட்டியாளர்களின் பாதுகாப்பு காரணமாக பிரதீப்பை வெளியேற்றியதாக கூறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட பாடகர் யுகேந்திரன், எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார். இவருடைய மனைவி ஹேமா மாலினி, பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹேமா மாலினி வெளியிட்டுள்ள வீடியோவில், “பெண்களின் பாதுகாப்புக்காக தான் பிரதீப் வெளியேற்றியதாக கமல் கூறுகிறார். புன்னகை மன்னன் படத்தில் நடிக்கும்போது நடிகை ரேகாவிடம் அனுமதி கேட்காமல் அவருக்கு கமல் லிப் கிஸ் கொடுத்தார். அப்போது ரேகாவுக்கு 16 வயது தான் இருந்தது. அந்த படத்தில் மட்டும் இல்லாமல், கமல் நடித்த பல படங்களிலும் நடிகையுடனான லிப் கிஸ் சீசன் இருக்கும். இப்படி இருக்கும்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து கமல் பேசுவது எனக்கு புரியவே இல்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“