Advertisment
Presenting Partner
Desktop GIF

ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி ஆன பிக் பாஸ் பிரபலம்; ரசிகர்கள் வாழ்த்து

ஜீ தமிழ் டிவியில் ரசிகர்களின் வரவேற்புடன் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை எண்ட்ரி கொடுத்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
veera serial

வீரா சீரியலில் கதாநாயகியின் தோழியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அபிராமி என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஜீ தமிழ் டிவியில் வீரா சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பசங்க படத்தில் நடித்த சிவகுமார் மற்றும் சின்னத்திரையிலும் முக்கிய நடிகையாக இருக்கும் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

Advertisment


வீரா சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒளிபரப்பாகத் தொடங்கியது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், வீரா சீரியலில் கதாநாயகியின் தோழியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அபிராமி என்ட்ரி கொடுத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அபிராமி வீரா சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் புரொமோ வீடியோவை வெளியாகி உள்ளது.


வீரா சீரியலில் கதாநாயகி வீராவிற்கு திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு வீராவின் தோழியாக நடிகை அபிராமி வருகிறார். 


வீரா சீரியலில் பிக்பாஸ் பிரபலம் அபிராமியின் எண்ட்ரி புரொமோ  வீடியோவைப் பாருங்கள்:


ஜீ தமிழ் டிவியில் வீரா சிரியலில் எண்ட்ரி கொடுத்துள்ள அபிராமிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், வீரா சீரியல் அபிராமியின் வருகைக்கு பிறகு மேலும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment