Advertisment

வனிதாவுக்கு டஃப் கொடுத்த பிக்பாஸ் பிரபலம் : இவங்கதான் ரியல் அம்மன்

Bigg boss actress Rekha amman get up goes viral: பிக் பாஸ் போட்டியாளரான நடிகை ரேகாவின் வேப்பிலைக்காரி அம்மன் கெட்டப்; சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோ...

author-image
WebDesk
New Update
வனிதாவுக்கு டஃப் கொடுத்த பிக்பாஸ் பிரபலம் : இவங்கதான் ரியல் அம்மன்

பிக் பாஸ் போட்டியாளரான நடிகை ரேகா அம்மன் கெட்டப்பில் வெளியிட்டுருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

90களில் சூப்பர் ஹிட் நடிகையாக வலம் வந்த ரேகா, இயக்குனர் பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள் படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர். அந்த படத்தில் அவர் நடித்த ஜெனிபர் டீச்சர் கதாப்பாத்திரம் ரசிகர்கள் மனதைக் கொள்ளைக் கொண்டது. புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பலப் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்தவர். விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற விஜய் டிவி ஷோவான பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துக் கொண்டார்.

தற்போது, ரேகா அம்மன் கெட்டப்பில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் ரேகா, ’ஜெனிபர் டீச்சர் முதல் வேப்பிலைக்காரி அம்மன் வரை’ எனது பயணம் என்றும் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறினார். சரியான மரியாதை கிடைக்காததால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அவர் கூறினார். மேலும், ஆணவத்தால் என் வளர்ச்சியை தாங்க முடியாத ஒருவர் எனக்கு தொல்லை கொடுத்து, அவமானப்படுத்தி மோசமாக நடத்தினார். பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்றும் கூறி இருந்தார்.

வனிதா, பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கடைசியாக ஆடிய நடனத்தில் அம்மன் கெட்டப்பில் தோன்றியிருந்தார். அந்த கெட்டப்பில் வனிதா சரியாக ஆடாததால், போட்டி நடுவர்கள் அதிருப்தி தெரிவித்ததோடு மதிப்பெண்களும் குறைவாக கொடுத்தனர். அத்துடன் வனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். தற்போது வனிதாவை தொடர்ந்து, ரேகாவும் அம்மன் கெட்டப்பில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆடி மாதத்திற்காக அம்மன் கெட்டப் போட்டுள்ளதாக ரேகா தெரிவித்துள்ளார். இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanitha Vijayakumar Bigg Boss Tamil Cook With Comali Bigg Boss Jodigal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment