scorecardresearch

பிக்பாஸ் அமீர் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடுமையா? மனமுருகிய ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் அமீருக்கு மிகப்பெரிய அறிமுகம் கிடைத்தது. வீட்டுக்குள் நுழைந்த சில நாட்களிலே அமீர் காதல் புரோமோவிலும் இடம் பிடித்து விட்டார். இப்படி பிக்பாஸ் வீட்டில் விளையாட்டு பிள்ளையாக இருக்கும் அமீர் தனது இளவயதில் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார்.

bigg boss tamil ameer
bigg boss ameer real life schoking story

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல்வேறு திருப்பங்களுடன் இறுதிச் சுற்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில், கோப்பையை வெல்வது யார் என்பது சில நாட்களிலே ரசிகர்கள் கணித்து விடுவார்கள். தங்களின் ஃபேவரைட் போட்டியாளருக்காக சமூக வலைதளங்களில் ஆர்மிக்களை தொடங்கி ஆதரவு அளிப்பார்க்கள்.

ஆனால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக இருக்கிறது. புதிய அறிமுகமில்லாத போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக்பாஸ் போட்டியில் வெல்ல போவது யார் என்பது இதுவரை தெரியவில்லை. ரசிகர்களும் ஒவ்வொரு வாரமும் யாரை வெளியேற்றுவது என குழப்பத்தில் உள்ளனர்.

இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் போட்டியில் இரண்டாவது வைல்ட் கார்ட் போட்டியாளராக நடன இயக்குனர் அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். வழக்கம்போலவே மற்ற போட்டியாளர்களை போல, இவருக்கும் மக்களிடம் பெரிய அறிமுகமில்லை. அவர் வீட்டுக்கு வந்த உடனே, யார் இந்த அமீர் என பலரும் இணையத்தில் தேடினர்.

அமீர் பிரபல நடன இயக்குநர்.  பிரபுதேவாவின் தீவிர ரசிகர். நடனத்தின் மீது கொண்ட தீராத காதலால், ஏடிஎஸ் க்ரூ ஊட்டி என்ற நடனக் குழுவை நிறுவினார். கிங்ஸ் ஆஃப் டான்ஸ், டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் மற்றும் இந்திய ஹிப்ஹாப் டான்ஸ் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு நடனப் போட்டிகளில் அவரது நடனக் குழு பல விருதுகளை பெற்றுள்ளது.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் நடன நிகழ்ச்சியிலும், இவர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும், ஒரு சில திரைப்படங்களுக்கும் இவர் கோரியோ செய்திருக்கிறார் மற்றும் பிற மொழிகளிலும் பணியாற்றினார்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் அமீருக்கு மிகப்பெரிய அறிமுகம் கிடைத்தது. வீட்டுக்குள் நுழைந்த சில நாட்களிலே அமீர் காதல் புரோமோவிலும் இடம் பிடித்து விட்டார். இவர் பாவனியுடன் செய்யும் குரும்புகள் தான் இப்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இப்படி பிக்பாஸ் வீட்டில் விளையாட்டு பிள்ளையாக இருக்கும் அமீர் தனது இளவயதில் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார்.

அவரது கதையை கேட்டால் கல் மனம் கூட கலங்கிவிடும். அமீர் தனது ஒரு வயதிலேயே தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். ஆனால் அமீருக்கு 16வது வயது இருக்கும்போது, அவரின் அம்மா கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அமீரும், அவருடைய அண்ணனும் ஒரு சிறிய ஆசிரமத்தில் தான் வளர்ந்து வந்தனர்.

அமீருக்கு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பது ஆசை. இதற்காக அவர் பாதுகாப்பு துறைக்கு படித்தார். நாட்டின் மீது கொண்ட பற்றால், தேசிய கொடியை தனது கையில் பச்சை குத்தியுள்ளார்.

ஆனால் கடைசியில் அமீர் பிரபல நடன இயக்குனராகி விட்டார்.

வெளிநாட்டில் வசிக்கும் அமீரின் நண்பர் ஒருவர் தான் இந்த தகவல்களையெல்லாம் கூறியுள்ளார்.

இப்படி வளரும் வயதில் பல கொடுமைகளை அனுபவித்த அமீர், படிப்படியாக முன்னேறி சொந்தமாக நடன நிறுவனத்தை தொடங்கி, இன்று பிரபலமான நடன இயக்குநராகி விட்டார். அமீரின் கதையை கேட்டு பலர் கலங்கினாலும், அவரது வாழ்க்கை இனி அவரை போன்ற முன்னேற துடிக்கும் பல இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss ameer losts his mother when he was 16 years old