Advertisment

லைவ் ஷோவில் ஸாராவை பெண் கேட்ட ரசிகர்: அர்ச்சனா என்ன பதில் சொன்னார் தெரியுமா?

bigg boss archana daughter marriage proposal: இன்ஸ்டா லைவ்வில் சாராவிடம் என்னை திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேட்ட ரசிகருக்கு, அவரது தாயார் அர்ச்சனா அளித்த பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது.

author-image
WebDesk
Apr 12, 2022 11:30 IST
New Update
Archana's daughter Zaara

bigg boss archana daughter: பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் அர்ச்சனா, அண்மையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' படத்தில் தனது நடிப்பு திறமையை நிரூபித்திருந்தார். இந்த திரைப்படம் அவரது மகள் ஸாராவின் திரைத்துறை என்ட்ரியாகவும் அமைந்தது. அப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சாரா நடித்திருந்தார்.

Advertisment

கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் போது கூட சமூக வலைதளத்தில் நெகட்டிவ் கமன்ட் செய்பவர்களை பற்றி அர்ச்சனா மகள் ஸாரா பேசியதை கண்டு பலரும் வியப்படைந்தனர்.தற்போது விஜய் டிவியில், அர்ச்சனாவும், ஸாராவும் "தாயில்லாமல் நானில்லை" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள்.

publive-image

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸாரா, அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது Followers கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்

அந்த வகையில், அண்மையில் இன்ஸ்டா லைவ்வில் ஸாராவிடம் ரசிகர் ஒருவர், என்னை திருமணம் செய்துகொள்வீர்களா? தயவுசெய்து பதில் கூறுங்கள், என்னை தூக்கில் தொங்க விடாதீர்கள்" என கேட்டிருந்தார்.

இதைப் பார்த்த சாரா, அந்த கேள்விக்கு பதிலளிக்குமாறு தன் தாய் அர்ச்சானாவிடம் கூறினார். லைவ்வில் பதிலளித்த அர்ச்சனா "உங்க அம்மா அப்பாவ ஒரு 15 வருஷம் கழிச்சி வந்து என்கிட்டே பேச சொல்லுப்பா" என்று தெரிவித்தார்.

அர்ச்சனா பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சாராவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vj Archana #Bigboss Archana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment