ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் : பிக்பாஸ் அர்ச்சனா மகள் கொடுத்த பதில் பாருங்க

Bigg boss archana daughter zara super reply to her trolls: ஓவரா சீன் போடுறீங்களே என்ற விமர்சனத்திற்கு என்ன விட்டுருங்க சார் என பதிலளித்துள்ளார் ஸாரா

ரசிகர்களின் நக்கல் கேள்விகளுக்கு அருமையாக பதிலளித்துள்ளார் பிக்பாஸ் அர்ச்சனாவின் மகள் ஸாரா.

சன் டிவியில் ஒளிப்பரப்பான காமெடி டைம் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அர்ச்சனா. அதற்கு முன் ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். பின்னர் பல்வேறு சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சிறப்பாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அர்ச்சனா, விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அர்ச்சனா வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தாலும், முக்கிய போட்டியாளராக அவர் மாறினார். ஆனால் சில நாட்களில் அங்கு சில போட்டியாளர்களுடன் சேர்ந்து குரூப்பிஸம் செயதார். இதனால் நிகழ்ச்சியில் அவரது செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அவர் பிக் பாஸ் வீட்டில் செய்த விஷயங்களுக்காக தற்போது வரை நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

இதனிடையே அர்ச்சனாவை மட்டுமின்றி அவரது மகள் ஸாராவையும் சேர்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஸாரா அர்ச்சனாவோட சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார். இந்த நிலையில் ஸாரா வயதுக்கு மீறிய வகையில் பேசுகிறார், இந்த வயதிலேயே இவ்ளோ attitudeஆ என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

நெட்டிசன்களின் இந்த விமர்சனங்களுக்கு ஸாரா தற்போது பதிலடி கொடுத்து உள்ளார் ஸாரா. ‘என்னை பார்க்காமல், என்னிடம் பேசாமல் இப்படி ஒரு குற்றச்சாட்டை என் மீது வைத்தால் என்ன சொல்வது என தெரியவில்லை. டேக் கேர்’ என பதிவிட்டு உள்ளார்.

“நீங்க சீன் போடுறீங்கனு சொல்றாங்களே உண்மையா, ஓவர் மெச்சுர்டு என காட்ட..” என மற்றொரு நெட்டிசன் கேட்க, அதற்கு ஸாரா ‘என்னால முடியல சார், விட்ருங்க’ என பதில் அளித்து உள்ளார்.

இப்படி அற்புதமாக பதிலளித்து இருக்கும் ஸாராவை, அர்ச்சனா மற்றும் ஸாராவின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss archana daughter zara super reply for her trolls

Next Story
சன் டிவியின் பிரபல சீரியலில் நாயகி மாற்றம் : ஏன் தெரியுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express