Bigg Boss 4 Tamil Balaji Murugadoss in Trouble : லேட்டாக ஆரம்பித்தாலும் பல்வேறு விதமான சர்ச்சைகளை உருவாக்கி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சி. கடந்த சீசன்களில் இல்லாத அளவிற்கு இம்முறை இளைய வட்டாரங்களின் வரவு அதிகம். அதிலும் ஏற்கெனவே பல சர்ச்சைகளில் கிசுகிசுக்கப்பட்ட பாடகி சுச்சி, முன்னாள் போட்டியாளரான தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி, நெட்டிசன்கள் மத்தியில் திடீரென ட்ரெண்டான நான்கு மணி ஷிவானி என்று ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டவர்களை பிக் பாஸ் வீடு வரவேற்றது.
இந்த சீசன் ஆரம்பத்திலிருந்தே பல்வேறு விதமான விவாதங்களில் முன்னாள் மிஸ்டர் இந்தியாவான பாலாஜி முருகதாஸின் பெயர் அடிபட்டது. அதில் சில நாட்களுக்கு முன்பு, விஜய் டிவி ஒளிபரப்பிய ஓர் ட்ரைலரை நீக்கியது. அந்த வீடியோவில் பாலாஜி முருகதாஸ் தன்னை இழிவாகப் பேசுவதாகக் கூறி ஓர் கடிதத்தில் எழுதி குற்றம் சாட்டியிருந்தார் சனம். தொலைக்காட்சி பின்னர் அந்த வீடியோவை நீக்கியது. ஒரு பெண்ணை இழிவுபடுத்தியதற்காக பாலாஜி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று பலர் கேட்டுக்கொண்டனர்.
சில அட்ஜஸ்ட்மென்ட்டுகளை செய்துதான் தான் அழகு போட்டியை வென்றதாக பாலாஜி கூறியதாக சனம் குற்றம் சாட்டினார். இந்த கடிதம் கொண்ட காணொளி பின்னர் நீக்கப்பட்டது. ஆனால், பாலாஜி உண்மையில் சனம் ஷெட்டியிடம் அந்த வார்த்தைகளைப் பேசியிருந்தால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனப் பலர் தங்களின் எதிர்ப்புகளை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து, ஜோ மைக்கேலின் M / s ராஸ்மதாஸ் குழுமம், மிஸ் தமிழ்நாடு மற்றும் மிஸ் தென்னிந்தியா நிறுவனங்கள் இணைந்து இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க மறுத்தால், பாலாஜி மீது அவதூறு வழக்குத் தாக்கல் செய்வதாக எச்சரித்துள்ளனர்.
ஜோ மைக்கேல் பிரவீன் தன்னுடைய அழகுப் போட்டியை அவமதித்ததற்காக பாலாஜி முருகதாஸ் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். பாலாஜி மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக 1 கோடி ரூபாய் கோரி பாலாஜி மீது அவதூறு வழக்குத் தாக்கல் செய்வதாக மேலும் அவர் கூறியிருந்தார்.
எந்தவொரு ஆதாரமும் இல்லாததால் ஜோ அந்த அறிக்கையை வெளியிட்டார் என்பது தெளிவாகிறது என பாலாஜியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அழகிப் போட்டி உரிமையாளரின் புகாரின் காரணமாக உண்மையை வெளிப்படுத்தத் தொலைக்காட்சி அழுத்தம் கொடுத்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"