பிக் பாஸ் 4 புகழ் பாலாஜி முருகதாஸின் தந்தை திடீர் மரணம்!

Bigg Boss Balaji Dad died தன் உறவினர்களைக் கட்டியணைத்து அழும் காட்சி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Bigg Boss Balaji Murugadoss Father passed away Bala Dad died Tamil News
Bigg Boss Balaji Murugadoss Father passed away

Bigg Boss 4 Tamil Balaji Father Passed away : பிக் பாஸ் சீசன் 4 புகழ் பாலாஜி முருகதாஸின் தந்தை சென்னையில் மரணமடைந்தார். பிக் பாஸ் சீசன் 4 தமிழ் ஹிட் ஆனதற்கு மிகப் பெரிய காரணமாக இருந்தவர் பாலாஜி என்றே சொல்லலாம். ஏராளமான சர்ச்சைகளை உருவாக்கி இன்றுவரை பேசும் நபராக இருக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 4-ன் இரண்டாவது வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலாஜிக்கு தற்போது ஏராளமான திரைப்பட வாய்ப்புகளும் குவிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவருடைய தந்தையின் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவருடைய தந்தையின் இறப்பை பாலாஜியின் சகோதரர் ரமேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த செய்தியைக் கேட்ட நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Bigg Boss Balaji Murugadoss Father passed away Bala Dad died Tamil News
Bigg Boss Bala Dad died

தன் தந்தையின் இழப்பைத் தாங்க முடியாமல் பாலாஜி தன் உறவினர்களைக் கட்டியணைத்து அழும் காட்சி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் மற்றும் சில பிரபலங்கள் இதுகுறித்து இரங்கல் செய்திகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss balaji murugadoss father passed away bala dad died tamil news

Next Story
ஹைதராபாத்தில் ரசிகர்களை சந்தித்த அஜித் : வைரலாகும் புகைப்படங்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express