பிக்பாஸ் பாஸ் பிரபலம் ஜூலி வெளிட்ட வீடியோ; கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமாகி பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ஜூலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். ஜூலி அப்படி என்ன வீடியோ வெளிட்டார் என்பதை பாருங்கள்.

By: January 6, 2020, 6:06:06 PM

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமாகி பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ஜூலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். ஜூலி அப்படி என்ன வீடியோ வெளிட்டார் என்பதை பாருங்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் அறியப்பட்டவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த வெளிச்சம் மூலம் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்சி மூலம் ஜூலி தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் அவருடைய செயல்பாடுகளுக்காக அவர் பலருடைய வெறுப்பை பெற்றார். அப்போதே பலரும் அவரை கிண்டல் செய்தனர்.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 1, சீசன் 2, சீசன் 3 என மூன்று சீசன்கள் முடிந்துவிட்டாலும் ரசிகர்கள் இன்னும் பிக் பாஸ் சீசன் 1-இல் பங்கேற்ற ஜூலியை மறக்காமல் நினைவில் வைத்துள்ளனர். அவ்வப்போது ஜூலி சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் ஏதேனும் பதிவிட்டால் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து திணறடித்துவந்தனர்.


இந்த நிலையில், ஜூலி தனது டுவிட்டர் பக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரேமம் படத்தில் சாய் பல்லவிக்காக நிவின் பாலி பாடிய பாடலை பயன்படுத்தி ஜூலி அழகாக ஒரு வீடியோவை டுவிட் செய்துள்ளார்.


இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஜூலியை ஏகத்துக்கும் கிண்டல் செய்து வருகின்றனர். ஜூலி ஆசையாய் ஒரு வீடியோவைப் பதிவிட அதற்காக அவரை இப்படி கிண்டல் செய்வது நியாயமில்லை என்று கூறும் அளவுக்கு பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

சில நெட்டிசன்கள், ஜூலிக்கு மனசுல சாய் பல்லவின்னு நினைப்பு என்று கிண்டல் செய்துள்ளனர். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் வந்த வசனத்தை பயன்படுத்தி ஜூலியை விமர்சித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss celebrity maria juliana tweet a video social media users teasing her

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X