பிக்பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு; சனம், நிஷா, ஜித்தன் வராதது ஏன்? வைரல் வீடியோ

நடிகை ரேகா இந்த நிகழ்வுக்கு வரமுடியாதவர்கள் பற்றி ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

bigg boss, bigg boss season 4, bigg boss contestants re union, பிக்பாஸ், பிக்பாஸ் 4, பிக்பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு, ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, வைரல் வீடியோ, bigg boss evicted contestant re union, rekha, velmurugan, samyuktha, suresh chakravarthy, re union, rekha video goes viral, bigg boss photos

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்துள்ள நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் சந்தித்துள்ளனர். ரேகா வெளியிட்ட சந்திப்பு வீடியோ, புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பால் விஜய் டிவி தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனை நடத்தி வருகிறது. இந்த சீசனையும் வழக்கம் போல, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

தற்போதைய பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் விதிமுறைகளின் அடிப்படையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன், சிசித்ரா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டபுள் எவிக்‌ஷன் நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷும் நிஷாவும் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் மீண்டும் சந்தித்து கொண்டாடியுள்ளனர். இதையடுத்து, நடிகை ரேகா இந்த நிகழ்வுக்கு வரமுடியாதவர்கள் பற்றி ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rekha Harris (@rekhaharris)

“ரமேஷ், நிஷா இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார்கள். சுசித்ரா கொஞ்சம் பிசியாக இருக்கிறார். சனம் ஷெட்டியை தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால்தான், அவர்களால் வர இந்த ரீ யூனியனுக்கு வர முடியவில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள்தான் போட்டி, வெளியே நாங்கள் நண்பர்கள். அடிக்கடி இப்படி சந்திக்க ஆசைப்படுகிறேன்’” என ரேகா தெரிவித்துள்ளார்.

ரேகா வெளியிட்டுள்ள வீடியோவும், பிக் பாஸ் போட்டியாளர்களான சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன் சம்யுக்தா ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss contestant rekha velmurugan samyuktha suresh chakravarthy re union video goes viral

Next Story
வெளியேற்றப்பட்ட நிஷா.. வலுவிழந்த லவ் பெட் கேங்!Bigg Boss 4 Tamil Vijay Tv Nisha Archana Aari Anita review Day 70
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express