பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட் கார்டில் எண்ட்ரியானவர் நடிகை சுஜா வருணி.
அவரது செய்கைகள் அனைத்தும் ஓவியாவை பிரதிபலிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தாலும், கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் வெற்றி பெற இறுதி வரை போராடுவார்.
இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை அந்நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டு, தனது திருமணத்தை, தந்தை ஸ்தானத்தில் கமல் இருந்து நடத்தி வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர், கடந்த நவம்பரில், நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம் குமாரின் மகன் சிவக்குமாரை அவர் மணந்தார்.
திருமணத்திற்குப் பிறகு, சுஜா - சிவக்குமார் இருவரையும் அழைத்து விருந்து வைத்து வாழ்த்தி அனுப்பினார் கமல்.
இந்நிலையில் தற்போது, சுஜா கர்ப்பமாகியிருக்கிறாராம். இந்த விஷயத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் சிவா, தன் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, குழந்தையின் வருகையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
”சிவாவுக்கு அவங்க அம்மான்னா ரொம்பப் பிடிக்கும், அதனால அவங்க அம்மாவே மறு பிறவி எடுத்து குழந்தையா போறாங்கன்னு ரொம்ப எமோஷனல் ஆகிட்டார். இப்போ அஞ்சாவது மாசம் நடக்குது. நாட்கள ரெண்டு பேரும் எண்ணிட்டு இருக்கோம்” என்கிறார் புன்னகையுடன் சுஜா