/tamil-ie/media/media_files/uploads/2021/01/Bigg-Ed-up.jpg)
Bigg Boss Editor photo
Bigg Boss Editor Tamil News : பிக் பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி என விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளின் சிறப்பம்சமே அதன் எடிட்டிங் வேலைப்பாடுகள்தான். ப்ரோமோ முதல் எபிசோட் வரை ரியாக்ஷன் முதல் பேக்கிரவுண்ட் மியூசிக் வரை சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் எடிட் செய்து கடந்த பிக் பாஸ் சீசனில் பரபரப்பைக் கிளப்பியது எடிட்டிங் மட்டுமே. 'யாருப்பா அந்த எடிட்டர்?' என பிக் பாஸ் எடிட்டரை தேடாத ஆள்களே இல்லை எனலாம். அந்தக் கேள்விக்கான விடையைப் புகைப்படத்தோடு வெளியிட்டிருக்கிறார் பிக் பாஸ் நான்காம் சீஸனில் இரண்டாவது இடம் பிடித்த பாலாஜி முருகதாஸ்.
/tamil-ie/media/media_files/uploads/2021/01/Bala-300x171.png)
கடந்த மூன்று மாதங்களாகக் காலை 9, பகல் 12 மற்றும் மாலை 3 மணி எப்போது வரும் என எதிர்பார்ப்பைக் கிளப்பியது பிக் பாஸ் ப்ரோமோக்கள். 9.01-க்கு ப்ரோமோ வரத் தாமதமானாலும் ரசிகர்கள் கொந்தளிக்கத் தொடங்குவார்கள். முழு எபிசோடை பார்ப்பார்களோ இல்லையோ நிச்சயம் ப்ரோமோவை யாரும் மிஸ் செய்ய மாட்டார்கள். அந்த அளவிற்கு எடிட்டரின் டச் இருக்கும். பல நேரங்களில் ப்ரோமோவில் வரும் காட்சிகள் முழு எபிசோடில் இல்லாமல்கூட போயிருக்கின்றன. அந்த நேரங்களில் மக்கள் கோபத்தின் உச்சிக்கே சென்று 'இனி இந்த நிகழ்ச்சியையே பார்க்க மாட்டோம்' என்று கமென்ட் அடித்தவர்களும் உண்டு.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில், தற்போது பலரும் தேடிக்கொண்டிருந்த அந்த எடிட்டரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் பாலாஜி. இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரியில் "இவர்தான் நாம் தேடிக்கொண்டிருந்த எடிட்டர். இல்லாத ஒன்றுக்கு BGM போட்டவர்" எனக் குறிப்பிட்டு எடிட்டரின் புகைப்படத்தையும் இணைத்திருக்கிறார் பாலா.
/tamil-ie/media/media_files/uploads/2021/01/Edi-278x300.png)
மேலும், "ராசா எங்களுக்கு கண்டென்ட் கொடுத்த தெய்வமே, பிக்பாஸை தூக்கி நிறுத்திய சிங்கமே, நீ இல்லேன்னா நாங்க இல்லையா" என எடிட்டர் மைண்ட் வாய்ஸாக பாலாவை புகழ்ந்து பேசுவது போல சில வரிகளையும் இணைத்திருக்கிறார். பாலாஜி மற்றும் பிக் பாஸ் எடிட்டரின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.