பழம்பெரும் நடிகர் பேரனுடன் ஒரே காரில் பிக் பாஸ் அபிராமி: ரசிகர்கள் கேட்ட கேள்வி
பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் பேரனுடன் ஒரே காரில் சுற்றும் பிக் பாஸ் பிரபலம் நடிகை அபிராமியிடம் ரசிகர்கள் அவருடைய கல்யாணம் பற்றி என்று கேள்வி கேட்டுள்ளனர்.
அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேஷன். இவருடைய பேரன்தான் அபிநய். ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரனான அபிநய் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதே போல, நடிகை அபிராமி பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
Advertisment
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி மற்றும் பினய் இருவரும் கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி இவர்களுக்கு ஒரு பெரிய வெளிச்சத்தை அளித்தது.
ஹாட் ஸ்டார் டிஸ்னி ஒ.டி.டி. தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆன பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிநய் மற்றும் அபிராமி இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபினய், அபிராமி, ஜூலி ஆகியோர் மூவர் அணியாக வலம் வந்தனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் வெளியேயும் தங்கள் நட்பை தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி, அபிராமி, ரம்யா பாண்டியன் ஆகியோர் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானது.
இந்த நிலையில், தற்போது அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அபினய் உடன் காரில் சுற்றி வருகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அபிராமியிடம் ‘எப்போதான் அக்கா நீங்க கல்யாணம் பண்ணுவீங்க’ என்று கேட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"