Advertisment

இரண்டாவது திருமணம் செய்த பிக் பாஸ் போட்டியாளர்; கல்யாண போட்டோஸ் வைரல்!

யூடியூப் விமர்சகராக இருந்த அபிஷேக் ராஜா, பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமானார். அபிஷேக் ராஜா ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், திங்கள்கிழமை அவருடைய இரண்டாவது திருமணம் நடந்துள்ளது.

author-image
WebDesk
New Update
abishek

அபிஷேக் ராஜாவின் கல்யாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

யூடியூப் விமர்சகராக இருந்த அபிஷேக் ராஜா, பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமானார். அபிஷேக் ராஜா ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், திங்கள்கிழமை அவருடைய இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. அபிஷேக் ராஜாவின் கல்யாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஆரம்பத்தில் ஒரு யூடியூப் சேனலில் சினிமா விமர்சகராக இருந்த அபிஷேக் ராஜா, பின்னர் ஓப்பன் பண்ணா எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து தனியாக விமர்சனங்களை வெளியிட்டு வந்தார். சினிமா பையன் என்கிற அடைமொழியுடன் புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்து வந்தார். 

அபிஷேக் ராஜா, கடந்த 2017 ஆம் ஆண்டு தீபா நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விரைவிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். 

முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு, தான் ஒரு 'பிரவுடான டைவர்ஸி' என்று அபிஷேக் ராஜா பேட்டிக் கொடுத்தார். பின்னர், பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்டு, வீட்டில் சர்ச்சைகளை உருவாக்கி ரசிகர்களை ஈர்த்தார்.

ராஜு ஜெயமோகன், பிரியங்கா தேஷ் பாண்டே, அமீர், பாவனி, இமான் அண்ணாச்சி, தாமரைச்செல்வி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக பங்கேற்ற அபிஷேக் ராஜா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், அவர் விரைவில் வைல்டு கார்டு மூலம் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றாலும் அவர் மீண்டும் வெளியேற்றப்பட்டார்.

யூடியூப் விமர்சகராக இருந்த அபிஷேக் ராஜா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமான நிலையில், அதன் பிறகு சினிமா சியக்குனராக வேண்டும் என்று போராடி வந்தார். அபிஷேக் ராஜா 'ஜாம் ஜாம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் அந்த படம் உருவாகி வருகிறது. ஜி.வி. பிரகாஷ் குமாரை வைத்து இசை ஆல்பம் ஒன்றையும் இவர் இயக்கியுள்ளார். 

abishek


இந்நிலையில், யூடியூப் விமர்சகர் மற்றும் பிக் பாஸ் பிரபலமான அபிஷேக் ராஜா இன்று தனது காதலி சுவாதி நாகராஜன் என்பவரை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

அபிஷேக் ராஜா, சுவாதி நாகராஜன் எனும் பத்திரிகையாளரை காதலித்து வந்த நிலையில், திங்கள்கிழமை அவரை திருமணம் செய்துக் கொண்டார். அபிஷேக் ராஜா கல்யாண புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 

அபிஷேக் ராஜாவின் வாழ்க்கை இனிமேல் ஹேப்பியாக இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்தி வருகின்றனர். விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் சினிமா பையனுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment