இதுதான் பாத்ரூம் டான்ஸ்? காலையிலேயே கச்சேரி வைத்த ஷிவானி
ஷிவானி காலையிலேயே இன்ஸ்டாவில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டு கச்சேரி வைத்துள்ளார். இருப்பினும், அவருடைய ரசிகர்கள் ஷிவானியின் டான்ஸ் செமயாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.
ஷிவானி காலையிலேயே இன்ஸ்டாவில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டு கச்சேரி வைத்துள்ளார். இருப்பினும், அவருடைய ரசிகர்கள் ஷிவானியின் டான்ஸ் செமயாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.
பிக் பாஸ் பிரபலம் நடிகை ஷிவானி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவைப் பதிவிட, அதற்கு நெட்டிசன்கள் இதுதான் பாத்ரூம் டான்ஸா என்று பதிவிட கேட்க ஷிவானி இன்ஸ்டாவில் காலையிலேயே கச்சேரி வைத்துவிட்டார்.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மூலம் சின்னத் திரையில் அறிமுகமாகி ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் உடன் நட்பாக நெருங்கி பழகியபோது, பிக் பாஸ் வீட்டுக்கு வந்தபோது ஷிவானியை அவருடைய அம்மா அவரை திட்டியபோது, ஷிவானி பற்றி சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஷிவானியைப் பற்றி அப்போது தொடங்கிய கிசுகிசு இப்போது வரை தொடர்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, நடிகை ஷிவானி, சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். நடிகர் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
நடிகை ஷிவானி சினிமா நடிக்கத் தொடங்கிவிட்டாலும், சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். ஷிவானி தனது அழகான, கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அவ்வப்போது, பாப்புலரான தமிழ் சினிமா பாடல்களுக்கு இன்ஸ்டாவில் ரீல் செய்து வருகிறார். அதற்கு, ரசிகர்களும் நெட்டிசன்களும் உடனுக்குடன் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்ற ‘டூ டூ ஐ லவ் யூ டூ’ வெளியானது. இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதனால், நடிகை ஷிவானி இன்று காலை ‘டூ டூ ஐ லவ் யூ டூ’ பாடலுக்கு டான்ஸ் ஆடி இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிர்கர்கள் ஷிவானியின் டான்ஸை பாராட்டி கம்மெண்ட் செய்து வருகின்றனர். இதில் ஒரு நெட்டிசன் ஷிவானியை கோபப்படுத்தும் விதமாக, இதுதான் பாத் ரூம் டான்ஸா என்று கேட்டு கம்மெண்ட் செய்துள்ளார். நெட்டிசனின் கம்மெண்ட்டுக்கு ஷிவானியின் ரசிகர்கள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர். இப்படி, ஷிவானி காலையிலேயே இன்ஸ்டாவில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டு கச்சேரி வைத்துள்ளார். இருப்பினும், அவருடைய ரசிகர்கள் ஷிவானியின் டான்ஸ் செமயாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"