மக்கு ரோபோட்? என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..!

பாலாஜி ஹாப்பி பர்த்டே மக்கு ரோபோட் ஷிவானி என்று புகைப்படம் வெளியிட்டதற்கு இன்ஸ்டாகிராமில் குவிந்த கம்மெண்ட்களைப் பார்த்த நெட்டிசன்கள் ‘என்னடா நடக்குது இங்கே’ என்று வடிவேலு காமெடி டயலாக்கை மைண்ட் வாய்சில் கேட்டு வருகின்றனர்.

bigg boss, bigg boss fame shivani narayanan, shivani, bigg boss balaji, balaji celebrates shivani birthday, பிக் பாஸ், ஷிவானி நாராயணன், ஷிவானி, பாலாஜி, பிக் பாஸ் பாலாஜி, ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டம், ஷிவானி பாலாஜி புகைப்படம், மக்கு ரோபோட், வைரல் புகைபடம், makku robot shivani, balaji shivani photos goes viral

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி தனது தோழி நடிகை ஷிவானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு மக்கு ரோபோட் என்று செல்லமாக குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் வடிவேலு கமேடி தொனியில் என்னடா நடக்குது இங்க என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். சீரியலில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் ஷிவானி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக செயல்பட்டுவந்தார். அழகான புகைப்படங்கள், டான்ஸ் வீடியோக்கள் என்று பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வந்தார். இந்த சூழலில்தான், ஷிவானிக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழகு பதுமையாக வலம் வந்த ஷிவானி, மற்றொரு போட்டியாளரான பாலாஜியுடன் நண்பரானார். அப்போது பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ஷிவானியின் அம்மா ஷிவானியை கடுமையாக திட்டி தீர்த்தார். பிக் பாஸ் ஃபைனலில் பாலா ரன்னர் அப்-ஆக வந்தார்.

அதற்குப் பிறகும், பாலாஜியும் ஷிவானியும் நண்பர்களாகவே தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில், ஷிவானி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். ஷிவானியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற பாலாஜி அவருக்கு கேக் ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஷிவானியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பாலா ஷிவானிக்கு கேக் ஊட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ‘ஹாப்பி பர்த்டே மக்கு ரோபோட் ஷிவானி நாராயணன்” என்று குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், ‘எப்போது கல்யாணம்’ என்று கேட்டு கம்மெண்ட் செய்துள்ளார்.

மற்றொரு இன்ஸ்டாகிராம் வாசி ‘அழகான ஜோடி’ என்று கம்மெண்ட் செய்துள்ளார். இன்னொரு இன்ஸ்டாகிராம் பயனர், ‘ஷிவானி உங்க அம்மா பேசுலயாமா?’ என்று கேட்டு கிண்டலாக பதிவிட்டுள்ளார். இப்படி சில இன்ஸ்டாகிராம் வாசிகள் பலவிதமாக கம்மெண்ட் செய்திருந்தாலும் நிறைய பேர் ஷிவானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாலாஜி ஹாப்பி பர்த்டே மக்கு ரோபோட் ஷிவானி என்று புகைப்படம் வெளியிட்டதற்கு இன்ஸ்டாகிராமில் குவிந்த கம்மெண்ட்களைப் பார்த்த நெட்டிசன்கள் ‘என்னடா நடக்குது இங்கே’ என்று வடிவேலு காமெடி டயலாக்கை மைண்ட் வாய்சில் கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss fame balaji celebrates shivani birthday photos goes viral

Next Story
Pandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா? தனம் காதல் கதை கேட்கும் மீனாvijay tv, pandian stores serial, pandian stores, pandian store serial today episode, pandian stores today episode story, விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு, பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய கதை, தனம், மூர்த்தி, கண்ணன், கதிர், முல்லை, மீனா, dhanam, murthy, kathir mullai, mullai, kathir, jeeva, meena, kannan, aishwarya, dhanam loves murthy
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com