Advertisment

சோஷியல் மீடியாவில் சாதிப்பெயரை வெளிப்படையாக அறிவித்த புதுமைப்பெண் ஐக்கி பெர்ரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து, மக்களிடையே பிரபலமடைந்த ஐக்கி பெர்ரி, தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில் சாதியின் பெயரை வெளிப்படையாக அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஒருவித நெருடலை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
iykki berry

Bigg boss fame iykki berry openly mentioned her caste name in social media

ஐக்கி பெர்ரி @ ஐக்யா காமராஜ் ஒரு இந்திய ராப்பர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்.

Advertisment

தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்து ஐக்கி, அங்குள்ள மகரிஷி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தனது எம்பிபிஎஸ் முடித்தார்.

ஐக்கி’ ஆரம்பத்தில் பிரபல பின்னணி பாடகி NSK ரம்யாவிடம் பாட்டு பயிற்சி பெற்றார். பின்னர் KM மியூசிக் கன்சர்வேட்டரியில் சேர்ந்தார், இது 2008 இல் இசை இயக்குனர் A. R. ரஹ்மானால் பிரேத்யகமாக இசைக்காக நிறுவப்பட்ட உயர்கல்வி நிறுவனமாகும்

ஐக்கி’ ஒரு பாடலாசிரியராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது பாடல் வரிகள் மற்றும் ட்யூன்’ இளம் இசை தயாரிப்பாளர் தேவ் மேஜர் மற்றும் ராப்பர் ஜாக்ஸ் ஈசன் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தது. இதனால் அவர் "கிளியோ தி லியோ" என்ற ஆங்கில தனிப்பாடலை கைவிட்டார். அப்போதிருந்து, ஐக்கி தனது எழுத்துத் திறனை மேம்படுத்தத் தொடங்கினார்.

பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்த ஐக்கி, தொடர்ந்து டெமோக்களை பதிவு செய்யத் தொடங்கினார். மேலும் பாடல்கள் எழுதுவது, ராப் மற்றும் இசையமைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டார்.

இந்த நேரத்தில்தான், இசை தயாரிப்பாளர் தேவ் மேஜர் "ஐக்கி பெர்ரி" என்ற மேடைப் பெயரை உருவாக்கினார். அதன்பிறகு ஐக்கி, நிறைய ராப் பாடல்கள் எழுதி, மியூசிக் வீடியோவிலும் தோன்றினார்.

ஜனவரி 2020-இல் ஐக்கி தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார். ’மீ சின்ஸ் 1991’ என பெயரிடப்பட்ட அந்த ஆல்பம்’ பிரேவ், ஜீலஸி, ஹியூமர் பாலிசி, சியஸ்டர் பாலிசி என மொத்தம் ஒன்பது பாடல்களை கொண்டிருந்தது.

அதிலிருந்து கானா, ஹங்காமா, ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், ஜியோசாவன் மற்றும் பிறவற்றில் ஐக்கியின் பாடல்கள் எப்போதும் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.

ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பிறகுதான் ஐக்கி’ வெளிச்சத்துக்கு வந்தார். ஆரம்பத்தில் ஐக்கியை பார்த்த பலரும் ஏதோ வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் போல என நினைத்தனர். ஆனால், அவருக்கு தஞ்சாவூர் என்பது தெரியவந்ததும் கமல் உள்பட பார்வையாளர்கள் அனைவரும் திகைத்து விட்டனர்.

அப்படி ஐக்கி தோற்றத்திலும், நடையிலும் பார்க்க தமிழ்ப்பெண்ணை போல இல்லாமல் பயங்கர மாடர்ன் லுக்கில் இருந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை ஐக்கி யாரிடமும் எந்த வம்பு தும்புக்கும் போகவில்லை. மனதில் பட்டதை யாருக்கும் காயப்படுத்தாமல், நாசூக்காக சொல்லும் அவரது குணம் மற்ற போட்டியாளர்களை காட்டிலும் ஐக்கியை தனித்துவமாகக் காட்டியது. ஆனால் இறுதியில் ஐக்கி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும், தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். மற்ற போட்டியாளர்கள் யாரிடமும் அவ்வளவாக தொடர்பில் இருக்கமாட்டார்கள். ஆனால் ஐக்கி அதிலும் வித்தியாசமாகத் தான் இருக்கிறார்.

சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஐக்கி பெர்ரி, தன்னுடன் விளையாடிய சக போட்டியாளர்களின் வீடுகளுக்கு சென்று நட்பு பாராட்டுகிறார்.

முதலில் தன் தோழி இசைவாணி வீட்டுக்கு சென்றார். பின்னர் இமான் அண்ணாச்சியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளை சந்தித்து வந்தார்.  பிறகு பிக்பாஸ் வீட்டில் இருந்து தானாகவே வெளியேறிய திருநங்கை நமீதா மாரிமுத்துவையும் சென்று பார்த்தார். தொடர்ந்து வருண், அபிஷேக் வீட்டுக்கும் சென்றார்.

பிறகு சென்ற வாரம் இமான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது தெரிந்ததும், மறுபடியும் ஐக்கி அண்ணாச்சி வீட்டுக்குச் சென்று அவரை நலம் விசாரித்து வந்தார். ஐக்கியின் இந்த நட்பு பாராட்டும் குணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடை, உடை, பாவனை என எல்லாவற்றிலும் இப்படி அனைத்திலும் மாடர்ன், மாடர்ன், மாடர்னாகவே இருக்கும் ஐக்கி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதி பெயரை பகிர்ந்துள்ளது ரசிகர்களுக்கு ஒருவித நெருடலை ஏற்படுத்தியுள்ளது.

publive-image

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு சில மாதங்களுக்கு முன், ஐக்கியின் பாட்டி தவறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஐக்கி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பாட்டியின் புகைப்படத்தை பகிர்ந்து, அவருடனான தன்னுடைய உறவு குறித்து விவரித்துள்ளார்.

அதில் ”நான் விஜயா ஐயாதுரையின் பேத்தி என்பதை பெருமையுடன் சொல்கிறேன்” என்று அவரது பாட்டியின் பெயருக்கு பின்னால் சாதி பெயரை குறிப்பிட்டுள்ளார். இதுதான் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பெயர்களுக்கு பின்னாடி சாதி பெயர்களை போடுவதை தவிர்த்து, தான் படித்து வாங்கிய பட்டங்களை போடுவதில் தமிழக மக்கள் முன்னோடியாக உள்ளனர்.

ஆனால் உலகம் எவ்வளவும் முன்னேறினாலும், மனிதர்கள் எவ்வளவு மாடர்ன் ஆக இருந்தாலும் இந்த சாதியை மட்டும் ஏன் விடாமல் பிடித்து வைக்கின்றனர். இப்போது அரசியல், சினிமா உட்பட அனைத்து இடங்களிலும் சாதிக்கு எதிரான குரல் வலுக்கத் தொடங்கியுள்ளது.

அதிலும் மருத்துவர் ஐக்கி புதுமைப்பெண்ணின் மறுவடிவம். அவர் தோற்றம், குணம், மற்ற மனிதர்களிடம் பழகுவது என ஐக்கி செய்வது ஒவ்வொன்றும்’ கூட்டுக்குள்ளே அடைந்து கிடைக்கும் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. ஆனால் இப்படி மாடர்ன்-ஆக இருக்கும் ஐக்கியே தனது சாதி பெயரை பொதுவெளியில் அறிவித்திருப்பது கொஞ்சமும் பாராட்டும்படி இல்லை. இது அவர் சாதியை பெருமைப்படுத்துவது போல இருக்கிறது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக படித்தவர்கள் தான் இந்த சாதிக்கு எதிரான சமத்துவ மனநிலையை முன்னேடுத்து செல்ல வேண்டும். எனவே படித்த மாடர்ண் பெண் ஐக்கி’ மீண்டும் இதுபோல் செய்யமாட்டார் என நம்புவோம் என ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment