இந்த பிக்பாஸ் பிரபலம் இவ்வளவு சூப்பரா பாடுவாரா? வீடியோ பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி ஐயர் முதல்முறையாக பாடிய பாடல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தியுடன் இணைந்து பாடிய ஜனனி ஐயரின் வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் இவர் இவ்வளவு சூப்பரா பாடுவாரா என்று வியப்பு தெரிவித்துள்ளனர்.

By: Updated: May 3, 2020, 06:00:54 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி ஐயர் முதல்முறையாக பாடிய பாடல் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

மாடலிங்கில் தனது கேரியரைத் தொடங்கிய ஜனனி ஐயர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு திரு திரு துரு துரு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தமிழ் சினிமா உலகத்துக்கு அறிமுகமானார். அதன் பிறகு, இயக்குனர் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து இவருக்கு பெரிய அளவில் படங்கள் அமையாத நிலையில், தெகிடி படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்துக்குப் பிறகு ஜனனி ஐயருக்கு பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை.

ஜனனி ஐயர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாள சினிமா உலகமான மோலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஜனனி ஐயர் தொல்லைக்காட்சி, வேழம், கசட தபற ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்த கொரோனா பொது முடக்க காலத்தில், சினிமா நட்சத்திரங்கள், விழிப்புணர்வு வீடியோக்கள், புகைப்படங்கள், வேடிக்கை விடியோக்கள் என வெளியிட்டு இந்த ஊரடங்கு தனிமையை கடந்து வருகின்றனர். சிலர் பாடல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், ஜனனி ஐயர் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் உன் நெருக்கம் என்ற ஒரு ரொமான்ஸ் பாடலை அழகாகப் பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.


இதுவரை ஒரு அழகான சினிமா நடிகை என்று அறியப்பட்ட ஜனனி ஐயர் இந்த பாடலின் மூலம் ஒரு பாடகியாக வெளிப்பட்டுள்ளார். முதல் முறையாக தான் பாடிய பாடலின் வீடியோவை ஜனனி ஐயர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பிக் பாஸ் ஜனனி ஐயர் இவ்வளவு சூப்பரா பாடுவாரா என்று வியந்து பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ குறித்து ஜனனி ஐயர் குறிப்பிடுகையில், “இது என்னுடைய முதல் முறையாக பாடல் பாடிய அனுபவம். முதல் முறையாக பாட முயற்சித்துள்ளேன். பாடுவதற்கு ஊக்கம் அளித்த அஸ்வினுக்கு நன்றி. இந்த பாடல் ஸ்கைப் மூலம் பாடப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த பாடலை அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss fame janani iyer first time singing song video goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X