/tamil-ie/media/media_files/uploads/2020/04/bigg-boss-kavin2.jpg)
bigg boss fame kavin shares a lovable video, bigg boss fame kavin, பிக் பாஸ் பிரபலம் கவின், கவின் வெளியிட்ட நெகிழ்சி வீடியோ, kavin shares lovable dog video, tamil entertainment news, tamil video news, tamil viral news, tamil cinema news
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் கவின் தனது இன்ஸ்டாமிராம் பக்கத்தில் ‘அன்பெனப்படுவது யாதெனில்...’ என்று வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். நெகிழ்ச்சியான அந்த வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் பார்த்து லைக் செய்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகர் கவின். கவின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அனைவராலும் அறியப்பட்ட போட்டியாளர். பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது, அந்த நிகழ்ச்சியில் அவருடன் போட்டியாளராக கலந்துகொண்ட லாஸ்லியாவுக்கும் கவினுக்கும் இடையே நிலவிய காதல் நிகழ்வுகள் மூலம் கவின் - லாஸ்லியா இருவரும் பிரபலமானார்கள். போட்டியின் இறுதி நாளுக்கு முன்பே பிக்பாஸ் ஆஃபர் செய்த ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதன் மூலம் மேலும் கவனம் பெற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, கவினும் லாஸ்லியாவும் தங்களுடைய காதல் பற்றி எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில், கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
கவின் ‘அன்பெனப்படுவது யாதெனில்...’ என்று குறிப்பிட்டுள்ள அந்த வீடியோவில், நீண்ட நாள் பிரிவுக்குப் பிறகு, தன்னை வளர்த்தவர்களைப் பார்க்கும் ஒரு நாய்க்குட்டி கதறி தனது அன்பை வெளிப்படுத்துகிறது. அந்த வீட்டில் உள்ள ஒரு சிறுவன் அந்த நாய்க்குட்டியைப் பார்த்து கட்டிப்பிடித்து அழுது தனது அன்பை தெரிவிக்கிறான். பார்ப்பவர்களைக் கண்கலங்கச் செய்யும் நெகிழ்ச்சியான இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் லைக் செய்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.