/tamil-ie/media/media_files/uploads/2020/11/image-68-1.jpg)
பிக் பாஸ் ஜூலியை, இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் அக்கவுண்டில் 50 ஆயரத்துக்கும் அதிகமான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். ஜூலி, தனது ட்விட்டர் அக்கவுண்டில் அவ்வப்போது வீடியோ, போட்டோக்களை பதிவிட்டு வருபவர். குறிப்பாக, சமீப காலமாக போட்டோஷூட் வீடியோ பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், பிக் பாஸ் ஜூலி தற்போது வெளியிட்ட போட்டோ ஒன்று பலரால் பேசப்பட்டு வருகிறது. அதில், மணலுக்குள் தனது உடலை மறைத்து ஜூலி போட்டோஷூட் கொடுத்திருக்கிறார். மேலும், எதிர்மறை எண்ணங்களை நீக்குங்கள், நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள். திரைப்படம் இன்னும் இருக்கிறது. அதிர்ச்சிகளும் , ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன என்று ஜூலி தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சியாக கொண்டாடப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே ”யாருடா இந்த பொண்னு” னு கேட்க வைத்தவர் ஜூலி.
பிக் பாஸ்’ முடிந்தபிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் ஜூலி. அதன் பின்பு, அம்மன் தாயி என்ற திரைப்படம் அவரைத் தேடி வந்தது.
Delete the negative
Accentuate
The positive
.
.
Movie still
.
Suspense and surprise awaiting pic.twitter.com/5DgYvZp1Cg
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) November 14, 2020
சில தினங்களுக்கு முன், உடல் முழுக்க கருப்பு மை பூசிக் கொள்ளும் படுபயங்கர போட்டோஷூட் வீடியோ ஒன்றையும் ஜூலி வெளியிட்டார். அதில், " எதையும் கிண்டல் செய்யும் மக்கள், கிண்டலடித்துக் கொண்டு தான் இருப்பார்கள். ஆனால், வெற்றியாளர்கள் மட்டுமே முன்னேறி செல்கின்றனர். இறுதியாக, இதுவும் கிண்டலாக்கப்படும் என்று எங்களுக்குத் தெரியும் .. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு படைப்பாற்றல் இவைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, மற்றவர்களின் கடின உழைப்பை கேளிக்கை செய்கின்றனர் …… நன்று! செய்து முடித்தோம், நிரூபித்தோம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று ஜூலி பதிவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.