/indian-express-tamil/media/media_files/Zsgf0bn462HGyXos7lgo.jpg)
புதிதாக யூடியூப் சேனல் தொடங்கிய பிக் பாஸ் பிரபலம்; பேரு இது தான்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சனம் ஷெட்டி புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி, தமிழில் 'அம்புலி' படத்தின் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து மாயை, தொட்டா விடாது, விலாசம், கதம் கதம், கலை வேந்தன், வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, தகடு, சதுரம் 2, எதிர்வினையாற்று, பார்த்திபன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் குருதிக்களம் என்ற வெப் சீரிஸிலும் நடித்தார்.
பின்னர் 2018ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டூ வில்லேஜ் என்ற ரியாலிட்டி ஷோவில் சனம் ஷெட்டி பங்கேற்றார். தொடர்ந்து விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக சனம் ஷெட்டி பங்கேற்றார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருந்து வரும் சனம் ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் என அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் சனம் ஷெட்டி சனமஸ்த்ரா என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
I'm finally on YouTube peeps 📢
— Sanam Shetty (@ungalsanam) February 11, 2024
Welcome to my New Channel - SANAMASTHRA 💞🏹https://t.co/3rXOLkuSNH
Please SUBSCRIBE and give me the same love you have always given me🙏
See you there with lots of creative, entertaining and informative videos.#YouTube#NewChannel#Subscribe… pic.twitter.com/uB6V2H38GY
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.