scorecardresearch

செம்ம அப்டேட்… சன் டிவி சீரியலில் நுழையும் சிவாஜி குடும்ப பெண் பிரபலம்!

Bigg Boss fame Sivaji family member to enter Anbe Vaa serial Tamil news நடிகர் திலகம் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சுஜாவிற்கு ஒரு குழந்தையும் உள்ளது.

செம்ம அப்டேட்… சன் டிவி சீரியலில் நுழையும் சிவாஜி குடும்ப பெண் பிரபலம்!
Bigg Boss fame Sivaji family member to enter Anbe Vaa serial Tamil news

Bigg Boss fame Sivaji family member to enter Anbe Vaa serial Tamil news : எண்ணிலடங்கா சீரியல்கள் இருந்தாலும், மனதிற்கு நெருக்கமான சீரியல்களில் ஒன்று சன் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் அன்பே வா. ராஜாஸ்ரீ என் ராய் திரைக்கதையில், ரதி பாலா வசனத்தில், சிவா எம்பி இயக்கத்தில் டெல்னா டேவிஸ், விராட் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, மக்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றாக எப்போதும் இந்த அன்பே வா தொடர் எப்போதும் இருக்கிறது.

தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நந்தன் லோகநாதன், பிர்லா பாஸ், வினயா பிரசாத், அகிரா, கன்யா பாரதி, ராஜலட்சுமி, பூஜா ஃபியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஏராளமான ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டிருக்கும் இந்த சீரியலில் அவ்வப்போது புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதும் உண்டு. அந்த வரிசையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

ஆம், பிளஸ் 2 என்ற திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான பல திரைப்படங்களில் குத்து பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். பல படங்களில் நடித்திருந்தாலும் மிளகா திரைப்படத்தில்தான் இவருடைய முகம் பலருக்கும் பரீட்சையமானது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல ரசிகர்களையும் பெற்றார். நடிகர் திலகம் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சுஜாவிற்கு ஒரு குழந்தையும் உள்ளது. இவர்தான் தற்போது அன்பே வா சீரியலில் இணையவுள்ளார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை சுஜா வருணி, திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இன்ஸ்டா, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்தவர் பல நாட்களாக வெள்ளித்திரையில் தோன்றாமல் இருந்தார்.  இப்போது சின்னத்திரையில் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார் சுஜா வருணி. தற்போது அவர் நடித்த காட்சிகள் இருக்கும் அன்பே வா சீரியலில் ப்ரோமோ வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss fame sivaji family member to enter anbe vaa serial tamil news

Best of Express