By: WebDesk
Updated: January 24, 2021, 12:49:01 PM
Bigg Boss fame Som Sekar ask fans to wait for three more days tamil news
Bigg Boss Som Sekar Tamil News : பல பரபரப்புகளுக்கு இடையே பிக் பாஸ் சீசன் 4 ஒருவழியாக நிறைவடைந்தது. இந்த சீசனில் சுவாரசியம் குறைவாக இருந்தாலும் சண்டைகளும் விவாதங்களும் அதிகமாக இருந்தன. என்றாலும், பலருடைய புகழ் உச்சத்தைத் தொட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
நன்கு தெரிந்த முகங்களோடு சில பரீட்சையும் இல்லாதவர்களும் இந்த சீசனில் கலந்துகொண்டனர். அந்த வரிசையில் சோம் சேகரும் ஒருவர். மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞரான இவருக்கு, பேசும் பொது திக்கும் குறைபாடு இருப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார். ஆனால், தன் விடாமுயற்சியால் இந்தப் பிரச்சினையை தற்போது தன்னம்பிக்கையோடு கடந்துகொண்டிருக்கிறார்.
இந்த சீஸனின் ‘டிக்கெட் டு ஃபினாலே’ வெற்றிபெற்று முதல் ஃபைனலிஸ்ட்டாக களமிறங்கியவர் சோம் சேகர்தான். அதேபோல் கிராண்ட் ஃபினாலேவில் முதல் ஆளாக வெளியேறியதும் அவர் தான். எதிர்மறை கருத்துகளும் அவ்வளவாக இல்லாத போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகு பல பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். ஆனால், சோம் வெளியில் வந்த பின் அதிகம் ரசிகர்களுடன் பேசவில்லை. அதற்கான காரணத்தைத் தற்போது வீடியோ மூலம் வெளியிட்டிருக்கிறார்.
அதில், “உங்கள் அன்பு மற்றும் ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. என்னை ஃபினாலே வரை வாக்களித்துக் கொண்டு வந்ததற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஏன் ரசிகர்களுடன் பேசவில்லை என்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் என்னைக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு உடல்நிலை சரி இல்லை. இப்போது பரவாயில்லை. நான் இப்போது கேரளாவில் இருக்கிறேன். கோவிலுக்குச் சென்றிருந்தேன். உங்களுக்கும் எனக்கும் சேர்த்து வேண்டிக்கொண்டேன். இன்னும் 3 அல்லது 4 நாள் டைம் கொடுங்கள். நான் சென்னை திரும்பி வந்ததும் நிச்சயம் இன்ஸ்டாகிராமில் லைவ் வருகிறேன். அனைவருக்கும் நிச்சயம் ரிப்ளை செய்கிறேன்” என சோம் பதிவிட்டிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“