New Update
/indian-express-tamil/media/media_files/oOgqFd2ueQTg9bjH9dqa.jpg)
சூப்பர் ஸ்டாருடன் பிக் பாஸ் பிரபலம் எடுத்துக் கொண்ட புகைப்படம்; இணையத்தில் வைரல்; யாருன்னு தெரியுதா?
சூப்பர் ஸ்டாருடன் பிக் பாஸ் பிரபலம் எடுத்துக் கொண்ட புகைப்படம்; இணையத்தில் வைரல்; யாருன்னு தெரியுதா?
சூப்பர் ஸ்டாருடன் பிக் பாஸ் பிரபலம் எடுத்துக் கொண்ட புகைப்படம்; இணையத்தில் வைரல்; யாருன்னு தெரியுதா?
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான விசித்ரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
90 களில் தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி, குணச்சித்திர நடிகையாக இருந்தவர் விசித்ரா. திருமணத்திற்கு பின் கணவர், பிள்ளைகளுடன் செட்டிலாகிவிட்டார். இந்தநிலையில், இந்த ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதை தொடர்ந்து பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். 77 நாட்களை கடந்து நிகழ்ச்சியில் போட்டியிட்டு வரும் விசித்ராவுக்கு ஆதரவு, எதிர்ப்பும் சரியான அளவில் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில், நடிகை விசித்ரா தனது இளம் வயதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகை விசித்ரா ரஜினிகாந்துடன் இணைந்து முத்து திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.