இந்த சீரியல் நடிகை பெரியார் பேத்தியா? சீண்டிய நபருக்கு சுளீர் பதில்

பிக்பாஸ் புகழ் நடிகை விஜயலட்சுமி, பெண்கள் மற்றும் திருநங்கையருக்கு பேருந்து கட்டணம் இலவசம் என்ற முதல்வரின் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

BiggBoss Vijayalakshmi Get Trolls by Netizens, Cool Reply : பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வைல்ட் கார்ட் ரவுண்ட் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர், நடிகை விஜயலட்சுமி. வைல்ட் கார்ட் எண்ட்ரீ என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம் பெற்று அசத்தினார். சென்னை-28 உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் உள்ளார். பிரபல திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகளும், சமீபத்தில் விஜய் டிவி யின் குக் வித் கோமாளி ஷோவின் டைட்டில் வின்னராக வெற்றிப் பெற்ற கனியின் சகோதரி தான் நடிகை விஜயலட்சுமி.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றப் பின், சாதாரணக் கட்டணம் வசூலிக்கப்படும் நகரப் பேருந்துகளில் பயணக் கட்டணம் இல்லை எனும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டத்திற்கு கையெழுத்திட்டார். நேற்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்தது.

முதல்வர் ஸ்டாலினின் இந்த திட்டம் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. பெண்களுக்கு மட்டுமில்லாது திருநங்கையருக்கும் பயணக் கட்டணம் இலவசம் என அறிவிக்க கோரி, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. மகளிர் நலன் போலவே திருநங்கையர் நலனும் காக்கப்படும் என ட்விட்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிக்பாஸ் புகழ் நடிகை விஜயலட்சுமி, பெண்கள் மற்றும் திருநங்கையருக்கு பேருந்து கட்டணம் இலவசம் என்ற முதல்வரின் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ‘கடந்த காலங்களில் நீங்கள் முதல்வர் ஆகாதது தங்களின் இழப்பு இல்லை. எங்களின் இழப்பு. எத்தனை சீரான தலைமை. தமிழ் நாடு இனி தலை தூக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமியின் கருத்துக்கு ட்விட்டரில் பலர் ஆதரவுக் குரலையும், எதிர்புக் குரலையும் எழுப்பி வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் ‘பெரியார் பேத்தியா’ என பதிவிட்டிருப்பது பல லைக்குகளை பெற்றுள்ளது. நெட்டிசன் கிண்டலாக அவ்வாறு பதிவு செய்திருப்பதற்கு நடிகை விஜயலட்சுமி கூலாக, ‘கண்டுபுடிச்சிட்டியா’ என பதிவிட்டுள்ளார்.

மற்றுமொரு நெட்டிசன், ‘இன்னும் காலம் இருக்கு விஜி அதற்குள்ளேயே புகழ்ந்து பாடினால் என்ன பண்றது’ என பதிவிட, ‘எதுவும் பண்ணலனா உடனே திட்றோம். எதாவது பண்ணுன வெயிட் பண்னி புகழனுமா சகோ’ என நடிகை விஜயலட்சுமி அவருக்கும் கூலாக பதிலளித்துள்ளார். இந்த பதிவானது தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss fame vijayalakshmi cool reply troll applauds twitter trend cm stalin womens free bus

Next Story
முகேஷ் அம்பானி, விஜய் டிவி சீரியல் பார்க்கிறாரா? சொல்லவே இல்ல..!Mukesh ambani watching vijay tv serial meme, Mukesh ambani meme, baakiyalakshmi serial meme, விஜய் விடி, பாக்யலட்சுமி சீரியல், முகேஷ் அம்பானி, கோபி, சதீஷ், vijay tv baakiyalakshmi serial meme, actor sathish shares meme, sathish shares mukesh ambani meme
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express