பிக் பாஸ் நிகழ்ச்சியில் அக்ஷராவை அழவைத்த பிரியங்கா மீது கோபமடைந்த ரசிகர்கள், பிரியங்கா செய்த தவறை சுட்டிகாட்டியுள்ளனர்.
விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்துள்ளது. இதில் அபிஷேக் எப்போதும் ஏதாவது செய்து சர்ச்சையாகி வருகிறார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா கேங்கின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா ரூல்ஸ் பேச ஆரம்பித்து, மதுமிதாவுக்கு பேனால என்ன எழுதி காட்டுன என கேட்டு அக்ஷராவிடம் சண்டை போடுகிறார். அக்ஷரா இது குறித்து விளக்கம் கொடுத்தும் பிடித்த பின்னரும், பிரியங்கா தொடர்ந்து அதுகுறித்தே கேட்டுவருகிறார்.
அப்போது பிரியங்கா, நாங்க சத்தமா பேசி மாட்டிகிறோம். நீ கமுக்கமா எழுதி கமிச்சி நல்ல பெயர் எடுத்துக்கிற, அது மக்களுக்கு தெரியாது என சண்டையிடுகிறார் பிரியங்கா. அதற்கு அக்ஷரா, அன்னைக்கு ஒரு நாள் தான் நான் மதுமிதாவுக்கு அப்படி பண்ணேன் அது கூட போனவாரம் என்கிறார். ஆனால் பிரியங்காவோ அக்ஷராவிடம், நீ எழுதி காட்னியா... நீ எழுதி காட்னியா என்று திரும்ப திரும்ப கேட்டு அக்ஷராவுக்கு தொல்லைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/246981203_1553768131636587_11873192249280472_n.jpg)
இப்படி பிரியங்கா பேசியதை நினைத்து அக்ஷரா அழுகிறார். அப்போது தாமரை மற்றும் சின்னப்பொண்ணு இருவரும் இது விளையாட்டு அவங்க அப்படித்தான் நீ அழாதே என்கின்றனர். அப்போது அக்ஷரா, நான் கதை சொன்ன போது ராஜு அண்ணா எனக்கு லைக் போட்டார். அப்போ எவ்வளவு பஞ்சாயத்து பண்ணாங்க. அதுக்கு அப்புறம் நான் எப்படி அவங்க கிட்ட ப்ரீயா பேச முடியும், எனக்கு அவங்ககிட்ட சண்டை போடவும் வரல என்று கூறி கண் கலங்கி அழுகிறார்.
அக்ஷரா அழுவதைப் பார்த்த அவரின் தீவிர ரசிகர் ஒருவர், பிரியங்காவின் செய்கையை சுட்டிகாட்டியுள்ளார். கடந்த வாரம் பிரியங்கா நிரூப் கையில் எதோ எழுதிகாட்டிய படத்தை பகிர்ந்து, அதில் பிரியங்கா கேமரா உணர்வுள்ளவள், கேமரா மற்றும் மைக்கில் சிக்காமல் ஒரு விஷயத்தை ரகசியமாக தெரிவிக்க அவருக்கு தெரியும், அக்ஷராவை இப்படி பேசும் பிரியங்கா நியாயமானவள் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil