விஜய் டி.வி டாப் சீரியலில் நுழையும் பிக் பாஸ் கே.பி: என்ன வேடம் தெரியுமா?

Bigg Boss Gabriella acts heroine in Vijay TV serial: விஜய் டிவி சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் பிக் பாஸ் கேப்ரியல்லா; எந்த சீரியல் தெரியுமா?

பிக் பாஸ் பிரபலம் கேப்ரியல்லா, விஜய் டிவியின் புதிய சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சி மூலம் டான்ஸராக பிரபலமானவர் கேப்ரியல்லா. பின்னர் விஜய் டிவியின் 7C சீரியலிலும் நடித்தார். கேப்ரியல்லா 3, அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் கேப்ரியல்லா, விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டார்.

இந்தநிலையில், விஜய் டிவியின் புதிய சீரியலில் ஹீரோயினாக கேப்ரியல்லா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஏற்கனவே வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகிய ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகத்தில் கேப்ரியல்லா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், கேப்ரியல்லா சீரியல் ஹீரோயினாகி உள்ளார்.

ஈரமான ரோஜாவே முதல் சீசனில் பவித்ரா மற்றும் திரவியம் முன்னனி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss gabriella acts heroine in vijay tv serial

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express