அட, இதற்கெல்லாமா வீடியோ போடுவாங்க? வகை வகையான முத்தம் பற்றி பாடம் எடுத்த சீரியல் ஜோடி!

Bigg boss ganesh venkatram and his wife nisha youtube video about kisses hits social media: முத்தத்தின் வகைகளைப் பட்டியலிடும் கணேஷ் – நிஷா ஜோடி; யூடியூப் வைரல் வீடியோ

முத்தத்தின் வகைகள் என்னென்ன என தனது மனைவியுடன் சேர்ந்து பட்டியலிட்டுள்ளார் பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராம்.

அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன், தீயா வேலை செய்யனும் குமாரு, தனி ஒருவன் போன்ற படங்களில் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராம். இவர் பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமானார்.

கணேஷ் நடிகை நிஷாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு சமைரா என்ற பெண் குழந்தை உள்ளது. நிஷா, மகாபாரதம் சீரியலில் திரௌபதியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் சன் டிவியில் காலை வணக்கம் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர். நான் சிகப்பு மனிதன், இவன் வேற மாதிரி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கணேஷ் மற்றும் நிஷா இருவரும் அவர்களது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.

கணேஷ் மற்றும் நிஷா இருவரும் சேர்ந்து சொந்தமாக ஒரு யூடியூப் சேனலும் நடத்தி வருகின்றனர். இதில் தற்போது அவர்கள் வெளியிட்டு உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கேண்டிட் காதல் எனும் தொடரின் முதல் எபிஷோடாக முத்தத்தின் வகைகள் பற்றி அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் பேசியிருப்பதுதான் அதற்கு காரணம். அந்த வீடியோவின் துவக்கத்திலேயே, இது நிச்சயமாக ஜோடிகளுக்கானது, சிங்கிள்ஸ் இதை பார்த்து கடுப்பு ஆனால் சங்கம் பொறுப்பல்ல என கூறிவிட்டு தான் முத்தத்தின் வகைகள் பற்றி பேசியிருக்கின்றனர் கணேஷூம் நிஷாவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss ganesh venkatram and his wife nisha youtube video about kisses hits social media

Next Story
புகை, மது… எதை தேர்வு செய்கிறார் ஆல்யா மானசா?raja rani 2 serial, raja rani 2 actress alya manasa, alya manasa, ராஜா ராணி 2, ஆல்யா மானசா, ஆல்யா மனசா வீடியோ, புகையா மதுவா, வைரல் வீடியோ, alya manasa which choose wine or smoke video, alya manasa instagram, alya manasa reel video, alya manasa
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com