பிக் பாஸ் நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சியை இசைவாணி தப்பா புரிந்துக் கொண்டுள்ளதாக அவரின் மகள் ஜெஃபி ஷைனி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வார இதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேர்மையாக விளையாடி வருபவர்களில் இமான் அண்ணாச்சியும் ஒருவர். அவரைப் பற்றி 12 ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகள் ஜெஃபி ஷைனி கூறுகையில், அப்பாவை தொடர்ந்து 4 சீசனுக்கும் கூப்பிட்டாங்க, பிக் பாஸ் பார்த்திருக்கோம், அதனால் அந்த வீட்டில் அப்பாவ பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு, இந்த சீசன் அப்பா போறேனு சொன்னதும் ஜாலியாகிடுச்சு,
அப்பா எப்பவுமே கோபப்பட மாட்டங்க, ரொம்ப கூலா எல்லாரையும் சிரிக்க வச்சிட்டே இருப்பார். அவர் கேரக்டர் பிக் பாஸ் வீட்டிலயும் மாறவேயில்ல. வீட்டில் இருக்குற மாதிரியே இருக்காங்க. பலரும் அவர் தப்பா பேசுறதா சொல்றாங்க… அவங்க நல்லதுக்காகத்தான் சொல்றாருன்னு யாருமே புரிஞ்சிக்கலை. அவர் எப்பவுமே எந்த விஷயத்துக்கும் எமோஷனல் ஆக மாட்டாங்க. சிரிச்ச முகமா இருப்பாங்க, அப்பா பயங்கர ஃப்ரெண்ட்லியாதான் என்கிட்ட பழகுவாங்க. ஆனா, நான் பொய் சொன்னா புடிக்காது.
எப்பவும் அப்பாவுக்கு மக்கள் சப்போர்ட் இருக்கும்னு நம்புறோம். அவருக்கு மனசுல பட்ட விஷயங்களை வெளிப்படையா மூஞ்சிக்கு நேரா சொல்லிடுவாரு. அவருக்கு பின்னாடி பேசுறதெல்லாம் அப்பாவுக்கு பிடிக்காது. எப்பவும் காமெடி பண்ணி சிரிக்க வச்சிட்டே இருப்பார். அப்பா பிக் பாஸ் வீட்டில் அம்மாவை பத்தி பெருமையா பேசுனப்போ அம்மா கண்கலங்கிட்டாங்க.
இசைவாணி அக்காகிட்ட அப்பா நல்லதுக்காக ஒரு விஷயம் சொல்றாங்க. ஆனா, அதை அவங்க தப்பா புரிஞ்சிக்கிறாங்க, அதனால்தான் அவங்களுக்குள்ள நிறைய தடவை முரண்பாடு வருது. ராஜூ அண்ணாவும் மத்தவங்களை ஹர்ட் பண்ணாம சிரிக்க வைக்கிறாங்கங்கிறதனால அவருக்கும் அப்பாவுக்கும் ஜெல் ஆகிடுச்சி. கடைசி வரைக்கும் அப்பாவுக்கும், ராஜூ அண்ணாவுக்கும் இடையில் நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கும்னு நினைக்கிறேன்.
அப்பா பிசிக்கலி ரொம்பவே ஸ்ட்ராங், பிசிக்கல் டாஸ்க் வர்றப்ப எல்லாரும் அதை புரிஞ்சிப்பாங்க. அடுத்த வாரம் எனக்கு பிறந்த நாள். இந்த பிறந்த நாளுக்கு அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வர்றப்ப அப்பா ஃபிட்டா வருவேன் பாருனு சொல்லிட்டு போனாரு பாக்கலாம். இவ்வாறு ஜெஃபி ஷைனி பேசியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil