வனிதா ஜோடி… யூத் கெட் அப்… செம்ம குத்தாட்டம்… மாஸ் காட்டும் சுரேஷ் தாத்தா!

Vanitha Suresh Viral Dance IN Bigg boss Jodigal : பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா சுரேஷ் இருவரும் ஆடிய நடனம் வைரலாகி வருகிறது.

Bigg Boss Jodigal Vanitha Suresh Viral Dance : விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், 4 சீசன்களை கடந்து விரைவில் 5-வது சீசன் தொடங்க இருப்பதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய சான்று. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அறுவடை செய்யும் வகையில் விஜய் டிவி பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தியதால் பாதியில் நிறுத்தப்பட்ட இந்நிகழ்ச்சியின் ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளாகள் அனைவரும் இந்நிகழ்ச்ச்யில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறன்றனர். இதனால் பிக்பாஸ் போலவே இந்நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் கலந்துகொள்ளும் அனைவரும் மற்றொருவருடன் ஜோடியாக பங்கேற்று வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சீசன்களில் தனியாளாக பங்கேற்ற வனிதா தற்போது சுரேஷ் சக்ரவர்த்தியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் ஜோடிகள் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனாலும் நெகட்டீவ் கமெண்ட்களை கண்டகொள்ளாத இவர்கள் இரும் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நடனத்தில், பலரும் பல விதமான கெட்டப்பில் அசத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட சுரோஷ் வனிதா ஜோடி ரசிகர்களின் கமெண்ட்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த வயதிலும் நான் இளமைதான் என சவால் விடும் அளவுக்கு நடனத்தில் அசத்தியுள்ளார் சுரேஷ் இவரது நடனம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் சுரேஷை கொண்டாடி வருகின்றனர். மேலும் இவருடன் சேர்ந்து வனிதாவும் தான் குத்தாட்டம் போட்டு பலருடைய மனதில் இடத்தை பிடித்திருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே சுரேஷ் சக்ரவர்த்தி தன்னுடைய சேட்டைகள் மற்றும் பயமறியா பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார். இதனால் சிலரது வெறுப்பை சம்பாதித்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்,  இந்த வயதிலும் இளைஞர்களுக்கு இணையாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாவாடை தாவணியில் வனிதாவும், தலையில் முடியோடு இளம் வயது ஹீரோவாக மாறிய சுரேஷ் சக்ரவர்த்தியும் ஆடிய ஆட்டம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss jodigal reality show vanitha vijayakumar and suresh viral dance

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com