புகழிடம் கடுப்பான ரம்யா கிருஷ்ணன்… அப்படி என்னதான் நடந்தது?
BB Jodikal judge Ramya Krishnan does prank with Cooku with comali pugazh Tamil News: 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில் அவ்வப்போது தோன்றி காமெடி செய்து வரும் குக் வித் கோமாளி புகழை நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணன் கடிந்து கொண்டது செட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BB Jodikal judge Ramya Krishnan does prank with Cooku with comali pugazh Tamil News: 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில் அவ்வப்போது தோன்றி காமெடி செய்து வரும் குக் வித் கோமாளி புகழை நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணன் கடிந்து கொண்டது செட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bigg Boss Jodigal Tamil News: சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பாப்புலரான டிவி எது என்று கேட்டால் பெருபாலோனோர் விஜய் டிவியை தான் கை காட்டுகிறார்கள். அந்த அளவிற்கு பல தரமான நிகழ்ச்சிகளை விஜய் டிவி தொகுத்து வழங்கி வருகிறது. இந்த டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி, ஜோடி போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பல சீசன்கள் கடந்து ஹிட் கொடுத்துள்ளன. இது தவிர சீரியல், மற்றும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் தோன்றும் நட்சத்திரங்களை போட்டியாளராக கொண்ட பல நிகழ்ச்சிகளும் அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றன.
Advertisment
அந்த வகையில் விஜய் டிவி தற்போது புதிதாக 'பிக் பாஸ் ஜோடிகள்' என்ற நிகழ்ச்சியை கையில் எடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 1 முதல் 4 வரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். நிகழ்ச்சியின் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை காமெடியோடு கொண்டு செல்ல விஜய் டிவியின் பிரபல காமெடி நட்சத்திரங்கள் புகழ், குரேஷி, தங்கதுரை ஆகியோர் அவ்வப்போது தோன்றி கலகலப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
Advertisment
Advertisements
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் சமீபத்தி ப்ரோமோவில், நிகழ்ச்சி நடுவராக உள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியின் நடுவே திடீரென தோன்றி காமெடி செய்ய முயன்ற குக் வித் கோமாளி புகழை கடுப்பாகி கடிந்து கொள்கிறார். இதைப் பார்த்த போட்டியாளர்கள் சில நொடிக்கு அதிர்ச்சியில் மூழ்குகிறார்கள். சில நிமிடங்கள் கழித்து தான் தெரிகிறது அது பிராங்க் என்று.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“