‘ஆத்தா வாயாட்டத்தை நிப்பாட்டு… மேடையில் வந்து ஆடு..!’ வனிதா டான்ஸ் வீடியோ

Bigg boss jodigal vanitha vijayakumar and suresh dance video promo hits social media: போன எபிஷோடுக்கே பயந்துக்கிட்டு வரல, இப்பவாவது வருவாங்களா என வனிதா கேட்க, அதற்கு சுரேஷ் ஆத்தா வாயாட்டத்தை நிப்பாட்டிட்டு இந்த மேடையில் வந்து ஆடுங்க பார்ப்போம் என வனிதாவை கலாய்த்துள்ளார்

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதாவை சுரேஷ் சக்ரவர்த்தி கலாய்த்திருப்பது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, ஒளிப்பரப்பாகும் நேரத்தில் டிஆர்பியில் எப்போதும் முன்னனியில் இருக்கும்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களிலும் கலந்துக் கொண்ட நட்சத்திரங்களைக் கொண்டு, விஜய் டிவி தற்போது பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதற்கு நடுவர்களாக நம்ம ராஜமாதா ரம்யா கிருஷ்ணனும், நகுலும் உள்ளனர்.

சில எபிஷோடுகள் ஒளிப்பரப்பான நிலையில், போட்டியாளர்களில் சிலரை கொரோனா தாக்கியதால் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா நிலைமை சரியாகி, மீண்டும் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

போட்டியின் ஆரம்ப எபிஷோடுகளில், வனிதா விஜயகுமார் ஜோடி இல்லாமல் தனியாக ஆடி வந்தார். இப்போது சுரேஷ் சக்ரவர்த்தி வனிதாவுக்கு ஜோடியாகியுள்ளார்.

தற்போது, இந்த வார எபிஷோடுக்கான ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி. அதில் விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளான ஆஜித் மற்றும் கேப்ரியலா ஜோடியின் அற்புதமான ஆட்டத்தை நடுவர்களான ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் பாராட்டியுள்ளனர்.இதுபோன்ற இளம் ஜோடிகளுடன், இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடி போட்டு ஆடி வருகின்றனர் வனிதாவும் சுரேஷூம்.

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் போன எபிஷோடுக்கே பயந்துக்கிட்டு வரல, இப்பவாவது வருவாங்களா என வனிதா கேட்க, அதற்கு சுரேஷ் ஆத்தா வாயாட்டத்தை நிப்பாட்டிட்டு இந்த மேடையில் வந்து ஆடுங்க பார்ப்போம் என வனிதாவை கலாய்த்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், வனிதா மற்றும் சுரேஷின் ஆட்டத்தை பார்த்து விட்டு சூப்பர் என சொல்லும் ரம்யா கிருஷ்ணன், உங்களிடம் நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன் என நல்லாவே கலாய்த்தும் உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss jodigal vanitha vijayakumar and suresh dance video promo hits social media

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express