Bigg Boss Jovika: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி புரோமோ வீடியோவில் ஜோவிகா ‘நான் வீட்டுக்கு போகிறேன்’ என்று கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டே பேசியிருக்கிறார். மேலும், தன்னை கேங்க் சேர்ந்து விளையாடுகிறேன் என்று பலர் இங்கே குறை சொல்கிறார்கள் என்று ஜோவிகா வேதனை தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்து வருகிறது. நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள ஜோவிகாவுக்கும் மற்றொரு போட்டியாளரான விசித்ராவுக்கும் இடையே ஜோவிகாவின் படிப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், ஜோவிகா எனக்கு படிப்பு வரவில்லை அதனால், தனக்கு இருக்கும் திறமையை வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று ஜோவிகா கூறினார். அப்போது நடந்த வாக்குவாதங்கள் சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் நடைபெற்றது.
ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் தனித்து விளையாடி வந்த நிலையில், மாயா கேங்கோடு சேர்ந்த பிறகு ஜோவிகாவின் ‘கேம்’ குறித்து பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஜோவிகான் அம்மா நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு, எப்போதும் போல பிக் பாஸ் ரிவ்யூவை முடித்துவிட்டு தன்னுடைய சகோதரியின் வீட்டில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் அவருடைய முகத்தில் காயம் ஏற்பட்டு இருந்தது. தனது முகத்தில் மர்ம நபர் தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்தியதை, வனிதா விஜயகுமார் சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். காயம் காரணமாக, வனிதா சில நாட்களாக பிக் பாஸ் ரிவ்யூ செய்யாமல் இருந்த நிலையில், மீண்டும் ரிவியூ செய்தார்.
வனிதா மீண்டும் ரிவ்யூ தொடங்கிய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி புரோமோவில், அவருடைய மகள் ஜோவிகா நான் வீட்டுக்கே எங்க அம்மாவிடம் போறேன் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
அந்த வீடியோவில், ஜோவிகா கதறி அழுதபடி நான் வீட்டுக்கே எங்க அம்மாவிடம் போறேன் என்று கூறியிருயிருப்பதை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள்கிண்டல் செய்து வருகின்றனர்.
முன்னதாக, பிக் பாஸ் வீட்டில் ஜோவிகா அதிகமாக தூங்குவதையே காட்டப்பட்டதற்கு வனிதா விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டார். ஜோவிகா சோகமாக இருப்பதால் அவருக்கு தூக்கம் வருகிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜோவிகா நான் வீட்டுக்கு போகிறேன் என்று கண்ணீர் விட்டு அழுதிருப்பது குறித்து வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நம் பிள்ளைகள் நமக்குத் தேவைப்படுகிறதை காட்டிலும் நம்முடைய ஆன்மாவுக்கு தேவை... சில நேரங்களில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.
மற்றொரு பதிவில், “முன்பெல்லாம் உங்களை யாராவது வெறுத்தால் நீங்கள் தவறு செய்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால், இப்போது நீங்கள் நல்லது செய்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் ஒரு பதிவில், “நான் நல்ல மனிதனாக இருக்க விரும்புவதில்லை என்பதை உணர்ந்தபோது என்னுடைய வாழ்க்கை நன்றாக மாறிவிட்டது. நைஸ் என்னை அழுத்தமாகவும் அவ மரியாதையாகவும் ஆக்கியது. நான் ஒரு நல்ல மனிதன், நான் உண்மையான மனிதன் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது” என்று ஒரு குழப்பமான ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
வனிதாவின் இந்த பதிவுகளைப் பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைத் தளங்களில் கம்மெண்ட் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.