பிக்பாஸ் ஜூலிக்கு இவ்வளவு திறமையா? வியந்து பாராட்டிய ரம்யா கிருஷ்ணன்

Bigg boss Julie dance in bb jodigal ramya krishnan impresses: பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சூப்பராக ஆடிய ஜூலி; ரம்யா கிருஷ்ணன் பாராட்டு

பிக் பாஸ் ஜூலியின் நடனத் திறமையை பாராட்டியுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

ஜல்லிகட்டு போராட்டத்தின் மூலம் கவனம் பெற்றவர் ஜூலி. பின்னர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துக் கொண்டார். அப்போது நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது. இப்போது வரை ஜூலியின் பதிவுகள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், ஜூலி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பான நடன நிகழ்ச்சியை ஜூலி தொகுத்து வழங்கினார்.

இப்போது விஜய் டிவி அனைத்து பிக் பாஸ் சீசன்களிலும் கலந்துக் கொண்ட போட்டியாளர்களைக் கொண்டு, பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை ஒளிப்பரப்பி வருகிறது. இதில் ஒரு போட்டியாளராக ஜூலி கலந்துக் கொண்டுள்ளார். இவருக்கு ஜோடியாக சென்றாயன் டான்ஸ் ஆடி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் முதல் எபிஷோடிலே, ஜூலி மற்றும் சென்றாயன் ஜோடி சிறப்பான நடனத்தை வெளிபடுத்தியிருந்தார்கள். அடுத்தடுத்த எபிஷோடுகளில் ஜூலி மற்றும் சென்றாயனின் டான்ஸ் வெகுவாக முன்னேறி வருவதாக நிகழ்ச்சியின் நடுவர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வார எபிஷோடுக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் ஜூலி மற்றும் சென்றாயன் ஜோடி சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை நிகழ்ச்சியின் நடுவரான ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் வியந்து பாராட்டியுள்ளார்.

ப்ரொமோவில் ஜூலியின் நடனத்திற்கு நெட்டிசன்களும் ஜூலியை பாராட்டி வருகின்றனர். தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களைத் தாண்டி மேலே வருவதற்காகவே தற்போது ஜூலி போராடுகிறார் என சிலர் பாராட்டி வருகின்றனர். மேலும் பலர் ஜூலியிடம் இவ்வளவு நடன திறமைகள் உள்ளதா ஆச்சரியப்படுகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss julie dance in bb jodigal ramya krishnan impresses

Next Story
இந்தியாவின் நம்பர்.1 பணக்காரர்… ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com