ஜூலி வெறியர்களுக்கு ஒரு குட் நியூஸ், ஓவியா ஆர்மிக்கு ஒரு சேட் நியூஸ்.. ஆனா தமிழக மக்களுக்கு இது என்ன மாதிரியான நியூஸ் என்று நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சியாக கொண்டாடப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே ”யாருடா இந்த பொண்னு” னு கேட்க வைத்த ஜூலி கூடிய விரைவில் அரசியல் கட்சி துவங்க இருக்கிறார்.
இதற்கான அறிவிப்பை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் குதிப்பது புதிதல்ல. ஆனால் அதே சமயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு ஒட்டு மொத்த சினிமா பிரபலங்களும் அரசியல் பக்கம் கவனம் செலுத்துவது தான் அதிர்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு பக்கம், நடிகர் கமல் ’மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் போருக்கு தயாராகுங்கள் என்று சூசகமாக தெரிவித்து வருகிறார். உட்சபட்ச நட்சத்திரமான கமல் - ரஜினி அரசியல் அறிவிப்பிற்கே மக்களிடம் ஆதரவு, எதிர்ப்பு குரல்கள் மாறி மாறி ஒலித்து வருகின்றன.
இந்நிலையில், பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் திரையில் தோன்றிய ஜூலி விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்திருப்பது ”என்னடா இது தமிழகத்திற்கு வந்த சோதனை” போல் மக்களை புலம்ப வைத்துள்ளது. அதிலும் ஜூலி வெளியிட்டுள்ள வீடியோவில் ரஜினி, கமல் அரசியல் அறிவிப்புக்கு நிகராக தன்னை முன்னிலைப்படுத்தி பேசுவது எல்லாம் ரொம்ப டூ மச்சு என்பதே வீடியோவை பார்த்த மக்களின் மைண்ட் வாய்ஸ்.
,
நாம் அனைவரும் ஒன்றாக வெற்றி பெறுவோம்#tamilnadu pic.twitter.com/J8VxhR5T6K
— எம் ஜூலி (M JULEE) (@lianajohn28) May 10, 2018
போனது போகட்டும், உறுதியாக ஜூலி சொல்லி முடித்திருப்பது என்னவென்று பார்த்தால் ”நம்ம மக்களுக்கு யார் நல்லது பண்ண போகிறார்கள்? நாணும் துவங்க போகிறேன் ஒரு கட்சி. விரைவில் அறிவிக்கப்பேகிறேன் காத்திருங்கள். ஒன்று சேர்ந்து வெல்வோம் ” என்பது தான்.
இதற்கு நெட்டிசன்கள் தங்களுக்கே உரிதான மீம்ஸ் மொழியில் பதில் அளித்து வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.